தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

28 Nov 2025, 2:28 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

சிபிஎம் போராட்டம் எதிரொலி கழிப்பிட பராமரிப்புப் பணிகள் தீவிரம்

நாமக்கல், நவ.28- சமூதாய கழிவறையை லட்சக்கணக்கில் செலவு செய்து பல ஆண்டுகளாக மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடாத நிலையில், மார்க்சிஸ்ட் கட்சியின் போராட்டத்தை யடுத்து, பராமரிப்பு பணிகளை ஊராட்சி நிர்வாகம் மேற் கொண்டுள்ளது. நாமக்கல், நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக் குட்பட்ட தொப்பபட்டி ஊராட்சி அம்மன் கோவில் பின்புறம் அண்ணா நகரில் சுமார் 2 லட்சம் மதிப்பீட்டில் 2019-20-ஆம் நிதியாண்டில் சமுதாய கழிவறை கட்டப்பட்டுள்ளது. மக்கள் வரிப்பணத்தில் சில லட்சம் செலவழித்து கட்டப்பட்ட கழி வறை தண்ணீர் வசதி இன்றியும், புதர்மண்டி காணப்பட்டது. மீண்டும் மராமத்துப் பணிகள் என்ற பெயரில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவழித்து மராமத்துப் பணிகள் மேற்கொள் ளப்பட்டும், மீண்டும் புதர் மண்டி பாம்பு உள்ளிட்ட விஷ  ஜந்துக்கள் நடமாடும் இடமாகவும், சமூக விரோத செயல்கள் நடப்பதற்கு வழிவகுக்கும் இடமாக மாறி உள்ளதால் மக்கள் மிகுந்த அச்சமும் வேதனைக்கும் உள்ளாகினர். மேற்படி கழிவறை தண்ணீர் வசதி இன்றி புதர் மண்டி பயன்பாட்டில் இல்லாததால் தொப்பபட்டி அண்ணா நகர்  பகுதி மக்கள் சுகாதார சீர் கேட்டால் பல்வேறு நோய்களுக் குள்ளாகி டெங்கு, மலேரியா, தோல் நோய்கள் உள்ளிட் டவை ஏற்படக்கூடிய அபாய நிலை இருந்தது. எனவே மேற் படி கழிப்பறையை தூய்மை செய்து தண்ணீர் வசதி செய்து கொடுத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி நவம்பர் 17 திங்களன்று தொப்பபட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்றது.  மேற்கண்ட பணிகளை மேற்கொள்ளாவிட்டால் அடுத்த  கட்ட போராட்டம் நடத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் அறிவித்திருந்தனர். அதன் விளைவாக நாம கிரிப்பேட்டை கிராம ஊராட்சிகளுக்கான வட்டார வளர்ச்சி அலுவலர் பசுபதி அவர்கள் மேற்பார்வையில் பராமரிப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ஒரு வாரத்திற் குள் கழிப்பிடம் மக்கள்   பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர் பசுபதி தெரிவித்துள்ளார். இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ரூ.1.10 கோடி மோசடி: இளைஞர் கைது

ஈரோடு, நவ.28- ஈரோட்டில் கண்ணாடி கடை உரிமையாளரின் வங்கிக்க ணக்கில் இருந்து ரூ.1.10 கோடி வரை மோசடி செய்த இளை ஞரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முகிம் கான் (45) என்ப வர், ஈரோடு பூங்கா சாலையில் கண்ணாடி கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் அதே மாநிலத்தைச் சேர்ந்த ஆதில் கான் (35) என்பவர் கணக்காளராகப் பணி யாற்றி வந்தார். மேலும், அவருக்கு கடையின் வங்கிக் கணக்கையும், சொந்த வங்கிக்கணக்கின் வரவு, செலவுகளை யும் மேற்பார்வையிடும் பணியை முகிம் கான் வழங்கியி ருந்தார். கடையின் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவது, கொள்முதல் செய்யும் பொருட்களுக்கு பணம் அனுப்புவது போன்ற பணிகளையும் ஆதில் கான் மேற்பார்வையிட்டு வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன் ஆதில் கான் வேலைக்கு வராமல் இருந்துள்ளார். இதையடுத்து முகிம்  கான் கடந்த அக்டோபர் மாதம் அவரது வங்கிக் கணக்கை  ஆய்வு செய்தபோது, பல லட்சம் ரூபாய் வெவ்வேறு  வங்கிக் கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டிருப்ப தும், அவரது காசோலையில் அவர் கையொப்பம் இல்லாம லேயே லட்சக்கணக்கான ரூபாய் ஆதில் கான் வங்கிக் கணக்குக்கு மோசடியாக பரிமாற்றம் செய்திருப்பதும் தெரிய வந்தது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவில் முகிம்  கான், கடந்த அக்டோபர் மாதம் புகாரளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட தில் முகிம் கான் வங்கிக் கணக்கின் மூலமும், காசோலை யில் போலியாக கையொப்பமிட்டும் ரூ.1.10 கோடியை ஆதில் கான் அவரது சொந்த வங்கிக் கணக்குக்கும், அவரது உறவி னர்கள் வங்கிக் கணக்குகளுக்கும் பரிமாற்றம் செய்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து காவல் உதவி ஆய்வா ளர் ஜாஸ்மின் தலைமையிலான போலீசார், ஆதில் கானை தேடி வந்தனர். இந்நிலையில், அவர் கடலூர் மாவட்டத்தில் பதுங்கியிருப்பதாக வந்த தகவலின்பேரில் அங்கு சென்ற மாவட்ட குற்றப் பிரிவு போலீசார், ஆதில்கானை புதனன்று  கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.