தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நீர் ஆதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி வறண்ட ஏரியில் படகுடன் சிபிஎம் போராட்டம்

27 Jun 2026, 12:47 am
நீர் ஆதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி வறண்ட ஏரியில் படகுடன் சிபிஎம் போராட்டம்
<p><strong>நீர் ஆதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி வறண்ட ஏரியில் படகுடன் சிபிஎம் போராட்டம்</strong></p><p>நாமக்கல், ஜூன் 26- நாமக்கல் மாவட்டம், திருச் செங்கோடு வட்டம் எலச்சிபாளை யம் அருகே உள்ள அகரம் ஏரியின் நீராதாரத்தை பாதுகாக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வலியு றுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வறண்ட ஏரிக்குள் பட கில் அமர்ந்து நூதன காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். எலச்சிபாளையம் காவல் நிலை யம் பின்புறம் அமைந்துள்ள 100 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமையான அகரம் ஏரி சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சீமைக் கருவேல மரங்கள் ஆக்கிரமித்து பயன்பாடின்றி இருந்த இந்த ஏரி, பொதுமக்கள் மற்றும் அரசின் முயற்சியால் தூர்வாரப்பட்டு ஆழப்படுத்தப்பட்டது. மேலும், திரு மணிமுத்தாற்றில் இருந்து உபரி நீர் திருப்பிவிடப்பட்டதால், மழைக் காலங்களில் ஏரி நிரம்பி, சுற்றுவட் டார கிணறுகள், போர்வெல்கள் மற் றும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வந்தது. தற்போது மழை குறைவால் ஏரி வறண்ட நிலையில் உள்ளது. இதேவேளை, சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், திரு மணிமுத்தாற்றில் வரும் நீர் ஏரியை சென்றடைய இருபுற வாய்க்கால் களையும் தூர்வார வேண்டும் என கடந்த ஆறு மாதங்களாக மாவட்ட ஆட்சியர், ஊராட்சி ஒன்றிய நிர்வா கம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரி களிடம் பலமுறை மனு அளிக்கப்பட் டது. கோரிக்கைகள் நிறைவேற்றப் படாததால், வியாழனன்று எலச்சி பாளையம் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் வறண்ட ஏரிக்குள் படகில் அமர்ந்து நூதன காத்திருப்புப் போராட்டம் நடத்தப் பட்டது. ஏரியில் மீண்டும் மழைநீரை சேமித்து குடிநீர் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் வரை போராட்டம் தொடரும் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். போராட்டத்திற்கு சிபிஎம் நாமக் கல் மேற்கு ஒன்றியச் செயலாளர் ஆர். ரமேஷ் தலைமை தாங்கினார். அகரம் முன்னாள் கவுன்சிலர் சு. சுரேஷ், சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் கவிதா, மூத்த நிர்வாகி கள் மாரிமுத்து, கிட்டுசாமி, துரை சாமி, முன்னாள் ஒன்றியச் செயலா ளர் பி. சுரேஷ், பெரியசாமி உள் ளிட்டோர் பங்கேற்றனர். மாலை வரை நீடித்த போராட் டத்தையடுத்து, எலச்சிபாளையம் காவல் ஆய்வாளர் சுமதி மற்றும் திருச்செங்கோடு நீர்வளத்துறை பாசனப் பிரிவு உதவி பொறியாளர் பிரபாகரன் ஆகியோர் போராட்டக் காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத் தினர். அதில், வருகிற 3 ஆம் தேதிக் குள் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரி கள் உறுதியளித்ததைத் தொடர்ந்து, போராட்டம் தற்காலிக மாக விலக்கிக் கொள்ளப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.