விலை உயர்வை தடுக்க நடவடிக்கை வேண்டும் திண்டுக்கல்லில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்
2 Nov 2026, 8:53 pm

விலை உயர்வை தடுக்க நடவடிக்கை வேண்டும் திண்டுக்கல்லில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

ஒட்டன்சத்திரம், நவ.2-வேடசந்தூரில் ஆத்துமேட்டில் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக் கும் அரிசி, பருப்பு, எண் ணெய் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தியும், ஒன்றிய, மாநில அரசுகளை கண்டித்தும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார் பில் திங்களன்று ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.ஒன்றிய குழு உறுப்பினர் எம்.பெரியசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கே.பிரபாகரன், ஒன்றியச் செயலாளர் ஜி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கோரிக் கைகளை விளக்கி பேசினர். ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சவடமுத்து, செல் வம்,ராகேஷ், மாரிமுத்து, சங்கப்பிள்ளை, பொன்மதிஉள்ளிட்ட ஏராளமானோர் பங் கேற்றனர்.

குஜிலியம்பாறையில் பழனிச்சாமி தலைமை வகித் தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ராமசாமி, மாவட்டக் குழு உறுப்பினர் ஏ.ராஜரத்தினம், ஒன்றியச் செயலாளர் எல்.ஜெயபால், ஒன்றியக் குழு உறுப்பினர் கள் பாலசுப்பிரமணி, சரவணன், தங்கவேல் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வடமதுரையில் எஸ்.சங் கர் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.செல்வராஜ், டி.முத்துச்சாமி, ஒன்றியச் செயலாளர் எம்.மலைச்சாமி, மூத்த தோழர் சி.குணசேகரன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் எம்.கே.சம்சுதீன், பி.தங்கராஜ், ஜெயராஜ், முருகன், மனோகரன், ஜோதிபாசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிலக்கோட்டையில் ஒன் றியச் செயலாளர் எம்.செந் தில்குமார், விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் எஸ்.ஆர்.சௌந்தர்ராஜன், பொருளாளர் காசிமாயன், வி.தொ.ச. மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.