முந்தய பக்கம்

மாணவி ரோஷினி குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீடு, அரசுப் பணி வழங்க சிபிஎம் கோரிக்கை - ஆர்ப்பாட்டம்

yesterday
மாணவி ரோஷினி குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீடு,  அரசுப் பணி வழங்க சிபிஎம் கோரிக்கை - ஆர்ப்பாட்டம்
<p><strong>மாணவி ரோஷினி குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீடு, அரசுப் பணி வழங்க சிபிஎம் கோரிக்கை - ஆர்ப்பாட்டம்</strong></p><p>தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே, நீட் தேர்வு கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட மாணவி ரோஷினி குடும்பத்திற்கு ரூ.20லட்சம் இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.வட்டச் செயலாளர் பி.காரல்மார்க்ஸ் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் ஏ.குமார், மாவட்டச் செயலாளர் இரா.சிசுபாலன், இந்திய மாணவர் சங்க மாநிலச் செயலாளர் தௌ. சம்சீர் அகமது, கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.முத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக மாணவி ரோஷினியின் பெற்றோரை நேரில் சந்தித்து தலைவர்கள் ஆறுதல் கூறினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram