நூறு நாள் வேலைத்திட்டத்தை சீரழிப்பதைக் கண்டித்து தேவிபட்டணத்தில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்
31 May 2026, 10:23 pm
<p><strong>நூறு நாள் வேலைத்திட்டத்தை சீரழிப்பதைக் கண்டித்து தேவிபட்டணத்தில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்</strong></p><p>தென்காசி, மே 31- நூறு நாள்வேலையை ஒழித்துக்கட்டும் விபிஜி ராம்ஜி என்ற திட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும். தொழிலாளர்களின் கரு விழி ஸ்கேன், விரல்ரேகை ஸ்கேன் செய்யும் முறையை கைவிட வேண்டும். 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தி ஒருநாள் சம்பளமாக ரூ. 700 வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தென்காசி மாவட்டம், வாசு தேவநல்லூர் ஒன்றியம், தேவி பட்டணத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிளைச் செயலாளர் கள் பாக்கியம், எம்.போத்தி ஆகியோர் தலைமை தாங்கினர் . தேவிபட்டணம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பொ.ஜெயராஜ், இடைகால் செல்லத் துரை மருதையா ஆகியோர் பேசினர். ஒன்றிய செயலாளர் நடராஜன் விளக்கிப் பேசினார். நிகழ்வில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி பலர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யில் இணைந்தனர். அவர்களுக்கு கிளையின் சார்பில் சால்வை அணிவித்து வரவேற்றனர். நிறைவாக மூத்த தோழர் அமல்ராஜ் பேசி னார்.</p>
