உள்ளாட்சிகளுக்கு உடனடி நிதி ஒதுக்க சிபிஎம் ஆர்ப்பாட்டம்
yesterday

உள்ளாட்சிகளுக்கு உடனடி நிதி ஒதுக்க சிபிஎம் ஆர்ப்பாட்டம்

உள்ளாட்சி அமைப்புகளுக்கு உடனடியாக உரிய நிதி ஒதுக்கிட வலியுறுத்தி தேன்கனிக்கோட்டை பேரூராட்சி அலுவலகம் முன்பு சிபிஎம் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. கெலமங்கலம் ஒன்றிய குழு செயலாளர் டி.ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.சேகர்,ஆர்.நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

போச்சம்பள்ளி நாதரசம்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு போச்சம்பள்ளி வட்ட குழு உறுப்பினர் கடல் வேந்தன் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் சாமு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் மகாலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.