தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அமலாக்கத்துறை தலைமையகத்தை முற்றுகையிட்டு சிபிஎம் போராட்டம்! தில்லியில் எம்.ஏ. பேபி - பிருந்தா காரத் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கைது

27 May 2026, 8:41 pm
அமலாக்கத்துறை தலைமையகத்தை முற்றுகையிட்டு சிபிஎம் போராட்டம்! தில்லியில் எம்.ஏ. பேபி - பிருந்தா காரத் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கைது

அமலாக்கத்துறை தலைமையகத்தை முற்றுகையிட்டு சிபிஎம் போராட்டம்! தில்லியில் எம்.ஏ. பேபி - பிருந்தா காரத் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கைது

புதுதில்லி, மே 27- கேரள முன்னாள் முதலமைச்ச ரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினருமான பினராயி விஜயனின் இல்லத்தில் அமலாக்கத்துறை (ED) நடத்திய சோதனையைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுதில்லியில் உள்ள இ.டி. தலைமையகத்தை முற்றுகை யிட்டு போராட்டம் நடைபெற்றது.

கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி தலைமையில் நடை பெற்ற இப்போராட்டத்தின் போது, மூத்த தலைவர்கள் உட்பட நூற்று க்கும் மேற்பட்டோரை தில்லி காவல்துறையினர் வலுக்கட்டா யமாகக் கைது செய்தனர்.

மூத்த தலைவர் பிருந்தா காரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர்கள் அசோக் தாவ்லே, மரியம் தாவ்லே, விஜூ கிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் விக்ரம் சிங் மற்றும் தில்லி மாநிலச் செய லாளர் அனுராக் சக்சேனா உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்களும் கைதாகினர்.

அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை: பேபி சாடல்

போராட்டத்தின் போது, கூடி யிருந்த மக்களிடையே உரை யாற்றிய சிபிஐ(எம்) பொதுச்செய லாளர் எம்.ஏ. பேபி, ஒன்றிய அர சின் தூண்டுதலின் கீழ் அமலா க்கத்துறை நடத்தியுள்ள இந்தச் சோதனை முற்றிலும் அரசியல் உள் ள்நோக்கம் கொண்டது என்றும், இது ஒரு தரம் தாழ்ந்த பழிவாங்கும் நடவடிக்கை என்றும் கடுமையாகக் கண்டித்தார்.

“எக்ஸாலாஜிக் (Exalogic) வழக்கில் பினராயி விஜயனுக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை என்று நீதிமன்றங்கள் பலமுறை தெளிவு படுத்தியுள்ளன. அப்படியிருந்தும் அவருக்கு எதிரான அரசியல் வேட்டை ஓயாமல் தொடர்கிறது. வீணாவின் தந்தை என்ற ஒரே காரணத்திற்காகவே அவர் தற்போது திட்டமிட்டு இலக்கு வைக்கப்படுகிறார்” என்று பின ராயி விஜயன் குற்றம் சாட்டினார்.

காங்கிரஸ் - பாஜக கூட்டுச் சதி?

கேரள முதலமைச்சர் வி.டி. சதீசன், தில்லியில் பிரதமரைச் சந்தித்துப் பேசிய உடனேயே இந்தச் சோதனை அரங்கேறி யிருப்பது, இது ஒரு முன்கூட்டியே திட்டமிடப்பட்ட அரசியல் நாடகம் என்ற பலத்த சந்தேகத்தை எழுப்பு கிறது என்றும் எம்.ஏ. பேபி சுட்டிக் காட்டியுள்ளார்.

சிஎம்ஆர்எல் (CMRL) டைரியில் யாருடைய பெயர்களெல்லாம் இடம் பெற்றிருந்ததாகக் கூறப்பட்ட தோ, அவர்கள் அனைவரும் தற்போ தைய கேரள மாநில அரசில் உயர்பத விகளில் நீடித்துக் கொண்டிருக் கிறார்கள். அவர்களைப் பற்றி எவ்வித விசாரணையும் நடத்தாமல் முற்றிலும் புறக்கணித்து விட்டு, பினராயி விஜயனை மட்டுமே தொடர்ந்து குறிவைப்பது இந்த நடவடிக்கைக்குப் பின்னால் இருக்கும் ‘கலப்படமற்ற அரசியல் வஞ்சகத்தை’ அம்பலப்படுத்து கிறது என்றும் பேபி சாடினார்.

நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு

“எந்தவொரு நியாயமான விசாரணை நடைமுறைகளுக்கும் முட்டுக்கட்டை போடும் எண்ணம் சிபிஐ(எம்) கட்சிக்குக் கிடையாது. ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் களை அரசியல் ரீதியாக ஒடுக்கு வதற்காக ஒன்றிய அரசு தனது புல னாய்வு முகமைகளை அப்பட்ட மாகத் துஷ்பிரயோகம் செய்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடி யாது” என்றும் பொதுச்செயலாளர் பேபி திட்டவட்டமாகக் கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவர்களைத் தேர்ந்தெடுத்துப் பழிவாங்கும் ஒன்றிய அரசின் பாசிசப் போக்கிற்கும், ஜனநாயக உரிமை களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்களுக்கும் எதிராக நாடு தழுவிய அளவில் மக்களைத் திரட்டி, சிபிஐ(எம்) மிக வலுவான போராட்டங்களை முன்னெடுக்கும் என்றும் பேபி எச்சரித்தார்.

நாடு முழுவதும் சிபிஎம் போராட்டம்

மோடி அரசின் பழிவாங்கும் அடிப்படையிலான இ.டி. சோதனை மற்றும் தில்லியில் போராடிய தலைவர்கள் மீதான காவல்துறையின் அடக்குமுறை ஆகியவற்றைக் கண்டித்து, சிபிஎம் சார்பில் நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. தமிழகத்திலும் புதன்கிழமையன்று மாலை பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. நாகர்கோவிலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், சட்டமன்ற உறுப்பினர் ஆர். செல்லசுவாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.