தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கடலூர் மாவட்டத்தில் சிபிஎம் ஆவேச ஆர்ப்பாட்டம் ஒன்றிய அரசை கண்டித்து முழக்கம்

19 Jun 2026, 11:57 pm
கடலூர் மாவட்டத்தில் சிபிஎம் ஆவேச ஆர்ப்பாட்டம் ஒன்றிய அரசை கண்டித்து முழக்கம்
<p><strong>கடலூர் மாவட்டத்தில் சிபிஎம் ஆவேச ஆர்ப்பாட்டம் ஒன்றிய அரசை கண்டித்து முழக்கம்</strong></p><p>​​​​​​​சிதம்பரம், ஜூன் 19- ஒன்றிய அரசை கண்டித்து கடலூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும், தொழிலாளர்களை பாதிக்கும் நான்கு புதிய தொழிலாளர் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது, மின் தடையை சரி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடலூர் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரி கடலூர் முதுநகர் அருகே ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஒன்றிய செயலாளர் பஞ்சாட்சரம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மாதவன், செயற்குழு உறுப்பினர்கள் ராஜேஷ் கண்ணன், அமர்நாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் மல்லிகா தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளர்க ளாக கட்சியின் மாநில குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ் பாபு, முன்னாள் மாநில குழு உறுப்பினர் மூசா, மூத்த உறுப்பினர் கற்பனைச் செல்வம், சிதம்பரம் நகர மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சிதம்பரம், கீரப்பாளை யம், பரங்கிப்பேட்டை தெற்கு, குமராட்சி கிழக்கு உள்ளிட்ட ஒன்றியக் குழுக்களை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். நகர்குழு உறுப்பினர் சங்க மேஸ்வரன் நன்றி கூறினார். பண்ருட்டியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் செயற்குழு உறுப்பினர் உதய குமார், வட்ட செயலாளர் ஏழுமலை, நகர செய லாளர் தேவராஜுலு, மாவட்ட குழு உறுப்பினர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.இதேபோல் காட்டுமன்னார்கோவில், புவனகிரி உள்ளிட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.