கடலூர் மாநகராட்சியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித்தருக 6 மையங்களில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்
29 Oct 2026, 11:28 pm

கடலூர் மாநகராட்சியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித்தருக 6 மையங்களில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

கடலூர்,அக்.29-கடலூர் மாநகராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 6 மையங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றன.

மாநகராட்சி பகுதிகளில் மக்களுக்கு காலை, மாலை இருவேளையும் சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும்; மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்க வேண்டும்; குப்பைகளைத் தினந்தோறும் அகற்ற வேண்டும். நவநீத நகர் மக்களுக்குப் பட்டா வழங்க வேண்டும். ரேஷன்கடைகளில் அனைத்து அத்தியாவசியப் பொருட் களையும் தடையின்றி வழங்க வேண்டும், திருப்பாதிரிப்புலியூர் பான்பரி மார்க்கெட்டை உடனடியாக கட்டி திறக்க வேண்டும், கடலூர் மஞ்சு குப்பத்தில் கட்டப்பட்டுள்ள பக்தவச்சலம் மார்க்கெட்டை திறந்து வியாபாரிகள் பயன்பாட்டிற்கு விட வேண்டும், தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் அமைக்கப்பட்டுள்ள சுங்க சாலையை மக்களின் பயன்பாட்டிற்கு விரைந்து திறந்து விட வேண்டும்.

மாநகராட்சியால் கட்டப்பட்டுள்ள மண்டல அலுவலகங்களை திறந்து மக்களின் பயன்பாட்டிற்கு விட வேண்டும், நகரப் பகுதிகளுக்குள் பேருந்து வசதி செய்து கொடுக்க வேண்டும், செம்மண்டலம் பகுதியில் போக்குவரத்து நெரிசலைகுறைக்க மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறுகோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்நடைபெற்றது.

மேலும், பான்பரி மார்க்கெட்டுக்கு மார்க்கெட்டுக்குச் செல்ல அகலமான பாதை அமைக்க வேண்டும்; பேருந்து நிலையத்தில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டன.

அகில் நாயுடு தெருரேஷன் கடை முன்புநடைபெற்ற ஆர்ப்பாட்ட த்துக்கு சிபிஎம் மாநகரக் குழு உறுப்பினர் எஸ். கருணாகரன் தலைமை தாங்கினார்.தானம் நகர் கிளைச் செயலாளர் கே.பி. செந்தில், நவநீத நகர் கிளைச் செயலாளர் பாலு ஆகியோர் முன்னிலைவகித்தனர்.

திருப்பாதிரிப்புலியூர் சிக்னல் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வார்டு கிளைச் செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். பான்பரி மார்க்கெட் கிளைச் செயலாளர் ராஜா, சூரப்ப நாயக்கன் சாவடி கிளைச் செயலாளர் பன்னீர், மாநகரக் குழு உறுப்பினர் பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செம்மண்டலம் பேருந்து

நிறுத்தம் அருகே நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர குழு உறுப்பினர் எஸ்.கே. தேவநாதன் தலைமை தாங்கினார். வண்டி பாளையம் ரோடு அருகே நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு மாநகர குழு உறுப்பினர் ஜாகிரா தலைமை தாங்கினார். செல்லங்குப்பத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட த்திற்கு மாநகர குழு உறுப்பினர் ஏ.எஸ்.பாபு தலைமை தாங்கினார். புதுப்பாளையம் கடைவீதி அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர குழு உறுப்பினர் பூபதி தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டங்களிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் கே. மாதவன், மாநகரச் செயலாளர் ஆர்.அமர்நாத், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வி.சுப்பராயன், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.கே.பக்கிரான், பி. வெங்கடேசன், குடியிருப்போர் சங்கத்தின் சிறப்பு தலை வர் எம். மருதவாணன் ஆகி யோரும் உரையாற்றினர். இதில்ஏராளமானோர் கலந்து கொண்ட னர்.