அடிப்படை வசதிகள் கோரி சிபிஎம் போராட்டம்!
24 Sept 2026, 1:26 am
<p><strong>அடிப்படை வசதிகள் கோரி சிபிஎம் போராட்டம்!</strong></p><p>உடுமலை, செப். 23-சின்னவீரம்பட்டி ஊராட்சியில் ஏழை மக்களுக்கு இலவச வீட்டு</p><p>மனை பட்டா வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊராட்சி கிளைகள் சார்பில் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு புதன்கிழமை கோரிக்கை முழக்கப்போராட்டம் நடைபெற்றது.கிளைச் செயலாளர் சிவராமன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், வருவாய்த்துறையிடம் விண்ணப்பித்துள்ள ஏழை மக்கள் அனைவருக்கும் இலவச வீட்டுமனை பட்டா மற்றும் வீடுகள் கட்டித் தர வேண்டும். 100 நாள் வேலைத்திட்டத்தில் பதிவு செய்த அனைவருக்கும் சட்டப்படி வேலை வழங்க வேண்டும். ஊராட்சியில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கண்டு சீராக குடிநீர் விநியோகிக்க வேண்டும்; அலட்சியம் காட்டும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சின்னவீரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை, விளையாட்டு மைதானத்துடன் கூடியமேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.இதில் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் பஞ்சலிங்கம், நகரச் செயலாளர் தண்டபாணி ஆகியோர் கண்டனஉரையாற்றினர். இதில் நகரக்குழு உறுப்பினர்கள் வசந்தி, ராஜா, சித்ரா, சக்திவேல், கிளைச் செயலாளர்கள்ரத்தினசாமி, சுந்தரம், ராஜன், மகேஸ்வரி உட்பட திரளானோர் பங்கேற்றனர்.</p>
