தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஒன்றிய கல்வி அமைச்சர் பதவி விலகக் கோரி சிபிஎம் மாநிலக்குழு அலுவலகத்தில் போராட்டம்

20 Jul 2026, 9:02 pm
ஒன்றிய கல்வி அமைச்சர் பதவி விலகக் கோரி சிபிஎம் மாநிலக்குழு அலுவலகத்தில் போராட்டம்

ஒன்றிய கல்வி அமைச்சர் பதவி விலகக் கோரி சிபிஎம் மாநிலக்குழு அலுவலகத்தில் போராட்டம்

சென்னை, ஜூலை 20- நீட் தேர்வு குளறுபடிகள், வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்குப் பொறுப் பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, 23 நாட் களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடு பட்டு வரும் சமூகச் செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக்கு ஆதரவாகத் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரு கின்றன.

இதன் ஒரு பகுதியாக, சென்னை தியாகராய நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலு வலகத்தில், ஒருவேளை உணவு புறக் கணிப்புப் போராட்டம் நடைபெற்றது.

இந்த அறப்போராட்டத்திற்கு கே. சமை யன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் பங்கேற்ற சிபிஎம் மத்திய கட்டுப்பாட்டு குழுத் தலைவர் ஜி. ராமகிருஷ்ணன் மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநி லச் செயற்குழு உறுப்பினர் கோ. அரவிந்த சாமி ஆகியோர் நீட் தேர்வினால் மாணவர் களுக்கும், பெற்றோர்களுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், ஒன்றிய அரசின் அலட்சியப்போக்கைக் கண்டித்தும் விளக்கவுரை ஆற்றினர்.

இப்போராட்டத்தில் சிபிஎம் மூத்த தலை வர் டி.கே. ரங்கராஜன், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் க. கனகராஜ், செ. முத்துக் கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர்கள் ப. செல்வசிங், ஆர். பத்ரி, இரா.சிந்தன், எஸ். பாலா, க.சரவணன், தோ.வில்சன், ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ். கார்த்திக், திரைப்பட இயக்குநர் ராஜுமுருகன் ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும், மாநிலக்குழு அலு வலகக் கிளைத் தோழர்கள் மற்றும் சமூக வலைதளக் குழுவைச் சேர்ந்த தோழர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு தங்களது ஆதரவைப் பதிவு செய்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.