சிறப்பு முகாமிற்கு வருவாய் ஆய்வாளர் வராததால் பாகூரில் சிபிஎம் ஆர்ப்பாட்டம் தாசில்தார் அலுவலகத்தில் பரபரப்பு!
24 May 2026, 2:18 am
<p><strong>சிறப்பு முகாமிற்கு வருவாய் ஆய்வாளர் வராததால் பாகூரில் சிபிஎம் ஆர்ப்பாட்டம் தாசில்தார் அலுவலகத்தில் பரபரப்பு!</strong></p><p>புதுச்சேரி, மே 23- உயர்கல்வி பயிலும் மாணவர்களுக் கான சிறப்பு முகாம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வருவாய் ஆய்வாளர் பணிக்கு வராததைக் கண்டித்துப் பாகூரில் பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி மாநில மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் உத்தரவின் பேரில், மே 23, 24 ஆகிய விடுமுறை நாட்களில் புதுச்சேரி மாநிலம் முழுவதும் உள்ள வட்டாட்சி யர் அலுவலகங்களில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்குத் தேவையான சான்றிதழ்களை உடனுக்குடன் வழங்கச் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், பாகூர் வருவாய்த்துறை ஆய்வாளர் சனிக்கிழமையன்று பிற்பகல் 12 மணி வரை தனது அலுவலகத்திற்கு வர வில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் குடியிருப்பு, சாதி மற்றும் வருமானச் சான்றி தழ்களைப் பெறுவதற்காகக் காலையி லிருந்தே காத்திருந்த பெற்றோர்களும், மாணவர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டதோடு, சான்றிதழ் பெற முடியாமல் தவித்தனர். சிபிஎம் ஆர்ப்பாட்டம் இத்தகவலை அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயற்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன், பாகூர் கமிட்டிச் செயலாளர் சரவணன், கமிட்டி உறுப்பினர் பக்தவச்சலம், கிளைச் செயலாளர் ஆனந்தராமன் மற்றும் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த மணிவண்ணன், அருள்ஒளி உள்ளிட்ட நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பாதிக்கப்பட்ட மக்களைத் திரட்டி, அலுவலகத்தின் முன்பு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், இது குறித்துப் பாகூர் தாசில்தாரிடம் நேரில் சென்று முறையிட்டனர். உடனடி நடவடிக்கை போராட்டத்தில் ஈடுபட்ட கட்சித் தலை வர்களுடனும், பொதுமக்களுடனும் வரு வாய்த்துறை அதிகாரிகள் உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், சம்பந்தப்பட்ட வருவாய் ஆய்வாளரை உடனடியாக அலுவலகத்திற்கு வர வழைத்து, மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்க உரிய ஏற்பாடுகளைச் செய்தனர். இந்தத் திடீர் போராட்டத்தால் பாகூர் தாசில்தார் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.</p>
