முந்தய பக்கம்

இரு வழிச்சாலை அமைக்கக்கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

13 Jul 2026, 12:14 am
இரு வழிச்சாலை அமைக்கக்கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்
<p><strong>இரு வழிச்சாலை அமைக்கக்கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்</strong></p><p>அவிநாசி, ஜூலை 12- வஞ்சிபாளையம் செல் லும் சாலையை, இரு வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசியிலிருந்து வஞ்சி பாளையம் செல்லும் சாலை, போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சாலையாக உள்ளது. இவ்வழி யாக தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயணிக்கின்றனர். இச்சாலையில் பல இடங்களில் அனு மதியின்றி பேரி கார்டுகள் வைக்கப்பட் டுள்ளதால், விபத்துகள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்ற னர். இந்நிலையில், அவிநாசி – வஞ்சி பாளையம் சாலையை இருவழிச் சாலை யாக மாற்றி அமைக்க வேண்டும். தேவையான சாலை பாதுகாப்பு வசதி களை உடனடியாக ஏற்படுத்த வேண் டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வஞ்சிபாளையம் கிளைக்குழுக்கள் சார்பில் ஞாயிறன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங் கேற்றவர்கள், சாலை விபத்தில் காய மடைந்தவர்களை போல தலை, கை மற் றும் கால்களில் கட்டுப் போட்டுக் கொண்டு, சாலை பாதுகாப்பு வசதிகள் இல்லாததால் தொடர்ந்து விபத்துகள் ஏற்படுவதாகக்கூறி முழக்கங்களை எழுப்பினர். வஞ்சிபாளையம் பகுதியில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, ஹனிபா தலைமை வகித்தார். இதில், சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் முத்துசாமி, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஈஸ்வர மூர்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினர் வேலுச்சாமி, ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram