முந்தய பக்கம்

பழுதடைந்த தார் சாலையை சீரமைத்திடக் கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

18 Aug 2026, 12:00 am
பழுதடைந்த தார் சாலையை சீரமைத்திடக் கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

பழுதடைந்த தார் சாலையை சீரமைத்திடக் கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

அவிநாசி, ஆக. 17-அவிநாசி அருகே உள்ள வெங்கமேடு செல்லும் தார்ச்சாலையை சீரமைத்திடக்கோரி, சாமந்தங்கோட்டை கிராம நிர்வாக அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கட்சியினர் திங்களன்றுஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவிநாசி ஒன்றியம், புதுப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட சாமந்தங்கோட்டையில் இருந்து கரட்டுப்பகுதி வழியாகவெங்கமேடு செல்லும் தார் சாலை மிகவும் பழுதடைந்துள்ளது. இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கின்றனர். எனவே இந்த சலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

இதேபோல, ரத்தினசாமி நகர் மற்றும் பாரதி நகரின் 7 வீதிகளுக்கும் வடிகால் வசதி அமைத்துத் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மிலிட்டரி பொன்னுச்சாமிதலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கிளைச் செயலாளர் சஜிதா வரவேற்றார். சிஐடியு மாநிலக் குழு உறுப்பினர் முத்துசாமி, சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் பழனிசாமி, ஒன்றியக் குழு உறுப்பினர்கள்முருகன், தங்கமணி, இந்திய மாணவர் சங்க ஒன்றியச் செயலாளர் ஆனந்த், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் நவமணி, முன்னாள் உறுப்பினர்கள் குமரவேல், பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட திரளானோர்பங்கேற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram