முந்தய பக்கம்

அடிப்படை வசதிகளை நிறைவேற்ற சிபிஎம் ஆர்ப்பாட்டம்

30 Sept 2026, 12:11 am
அடிப்படை வசதிகளை நிறைவேற்ற சிபிஎம் ஆர்ப்பாட்டம்

அடிப்படை வசதிகளை நிறைவேற்ற சிபிஎம் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியம் அரியலூர் கிராமத்தில் குடிநீர் பற்றாக்குறை, கழிவுநீர் கால்வாய் சேதம் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகள் நீண்ட நாட்களாக நிலவி வருகிறது. இதனை சரி செய்யக் கோரி செவ்வாயன்று (செப்.29) காலை அரியலூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரியலூர் கிளை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளைச் செயலாளர் கே.ராஜீவ்காந்தி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் வை.பழனி கண்டன உரையாற்றினார். கே.உத்திரக்குமார், ப.அம்பிகா, எஸ்.அர்ச்சுனன், ஓ.மாரி, ஏ.சேகர், ஜி.மஞ்சு, எம்.சரவணன், ஏ.வெங்கடேசன், யு.கனகா, ஆர்.ராமேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram