முந்தய பக்கம்

விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி கொட்டும் மழையிலும் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

1 Jun 2026, 11:51 pm
விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி கொட்டும் மழையிலும் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி கொட்டும் மழையிலும் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

ராணிப்பேட்டை, ஜூன் 1 – பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் விவசாய உரங்களின் விலை உயர்வை ஒன்றிய அரசு திரும்பப் பெற வலி யுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆற்காட்டில் திங்களன்று ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. ஆற்காடு பேருந்து நிலையம் அருகில் கிளைச் செயலாளர்கள் பி. கோவிந்தாராஜி, டி.விஜயன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கொட்டித் தீர்த்த கனமழை யையும் பொருட்படுத்தாமல் மார்க்சிஸ்ட் கட்சியினர் திரளாகக் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதில் ராணிப்பேட்டை மாவட்ட குழு உறுப்பினர் கே. ரவிச்சந்திரன், தாலுகா குழு உறுப்பினர்கள் பி. கன்னியப்பன், எம். கோதண்டராமன், கிளை உறுப்பினர்கள் வி. வேலு, எம். சரவணன், டி. லோகேஸ்வரன், வி. வேலாயுதம், எஸ்.எல். உலகநாதன், வி. பாலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மூத்த தோழர் டி. சந்திரன் நிறைவுரையாற்றினார்.

Share
FacebookXWhatsAppTelegram