சிபிஎம் போராட்ட அறிவிப்பு எதிரொலி 12 நாட்களுக்குப் பிறகு குடிநீர் விநியோகம்
26 Jun 2026, 1:44 am
<p><strong>சிபிஎம் போராட்ட அறிவிப்பு எதிரொலி 12 நாட்களுக்குப் பிறகு குடிநீர் விநியோகம்</strong></p><p>திருப்பூர், ஜூன் 25 - ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம், விருமாண்டம்பாளையம் ஊராட்சி, ஒத்தப்பனைமேடு, ஜெ.ஜெ.நகர் பகுதியில் குடிநீர் பிரச்சினை நிலவுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கிளைக் கூட்ட தீர்மானத்தின் அடிப்படையில் ஊத்துக்குளி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. மேலும் குடிநீர் பிரச்சினையை தீர்க்காவிட்டால் சாலை மறியல் போராட்டம் செய்யவும் அறிவித்திருந்தனர். இந்நிலையில், ஊத்துக்குளி மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அங்கு நேரடியாக ஆய்வு செய்து மின் மோட்டார் பழுது சரி செய்தும், உடைந்த குழாய்களையும் சீரமைத்து 12 நாட்களுக்கு பிறகு ஆற்றுக் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன் முயற்சியால் உடனடி நடவடிக்கை எடுத்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது குறித்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நன்றி தெரிவிப்பதாக கட்சியின் ஊத்துக்குளி தாலுகா செயலாளர் கு.சரஸ்வதி கூறியுள்ளார்.</p>
