தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை சிபிஎம் போராட்டம் அறிவிப்பு எதிரொலி

11 Nov 2025, 3:41 pm
அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை சிபிஎம் போராட்டம் அறிவிப்பு எதிரொலி
<p><strong>அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை&nbsp;சிபிஎம் போராட்டம் அறிவிப்பு எதிரொலி</strong></p> <p>நாமக்கல், நவ.11- வையப்பமலை ரேசன் கடையில் தொடர்ந்து அரிசி கடத்தப்படுவதால், ரேசன் கடையில் பணிபுரியும் பணியா ளரை பணியிட மாற்றம் செய்ய வேண் டும், அரிசி கடத்தலை தடுக்க வேண்டும் &nbsp;என மார்க்சிஸ்ட் கட்சியினர் புதனன்று &nbsp;போராட்டம் அறிவித்த நிலையில், மாவட்ட உணவுப் பொருள் மற்றும் கூட்டுறவு துறை அதிகாரிகள் பணியா ளரை பணியிட மாற்றம் செய்து நடவ டிக்கை மேற்கொண்டனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோடு அருகே வையப்பமலை சந்தப் பேட்டை அருகில் உள்ள ரேசன் கடை யில் கடந்த ஜனவரி மாதம் 2025 கிலோ &nbsp;ரேசன் அரிசி கடத்தப்பட்டது. இதன் மீது &nbsp;எஃப்ஐஆர் பதிவு செய்து மூன்று நபர் களை போலீசார் கைது செய்து சிறை யில் அடைத்தனர். இதன் பின்னர் தொடர்ந்து ரேசன் அரிசி கடத்துவதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் ரேசன் கடையில் பணிபுரியும் ஊழியரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி இன்று (புதன்கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்துவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அறிவித்தி ருந்தனர். இந்நிலையில், செவ்வாயன்று குடிமை பொருள் குற்ற புலனாய்வுத் துறை ஈரோடு உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராஜபாண்டி யன், காவல் ஆய்வாளர் ராஜ்குமார். காவல் உதவி ஆய்வாளர் தன்காந்தி மற்றும் கூட்டுறவு துணை பதிவாளர் செல்வி, திருச்செங்கோடு வட்ட வழங் கல் அலுவலர் கனக லட்சுமி உள்ளிட் டோர் அமைதி பேச்சு வார்த்தையை எலச்சிபாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் நடத்தினார்கள். இதன் அடிப்படையில் சம்பந்தப் பட்ட மாவட்ட உணவுப் பொருள் மற்றும் கூட்டுறவு துறை அதிகாரிகள் விசா ரணை செய்து வையப்பமலை ரேசன் கடையில் பணிபுரியும் பணியாளரை பணியிட மாற்றம் செய்தனர். மேலும், &nbsp;ரேசன் அரிசி கடத்தல் சம்பவத்தில் ஈடு பட்டு வரும் நபர்கள் மீது எலச்சிபாளை யம் காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதற்கு உறுதியளித்ததின் பேரில் &nbsp;நடைபெற இருந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கைகளை நிறை வேற்றிய உணவுப் பொருள் மற்றும் &nbsp;குடிமைப் பொருள் குற்ற புலனாய்வுத் துறைக்கும் தமிழக அரசுக்கும் நன்றி களை தெரிவித்துக் கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தமிழ்மணி, சுரேஷ், மேற்கு ஒன்றியச் செயலாளர் ரமேஷ், கிழக்கு ஒன்றியச் செயலாளர் தேவராஜன், மாவட்டக் குழு உறுப்பினர் பழனியம்மாள் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.