ஆந்திர மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி சிபிஎம் போராட்டம்
15 Jul 2026, 9:04 pm
<p><strong>ஆந்திர மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி சிபிஎம் போராட்டம்</strong></p><p>ஆந்திர மாநிலத்தில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு உள்ளார். இந்நிலையில், ஏழை குடும்பங்களுக்கு வீட்டு மனைகள் மற்றும் நிலப் பட்டாக்களை வழங்கக் கோரியும், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும் ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷின் (சந்திரபாபு மகன்) அலுவலகம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் பெரும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் சிபிஎம் ஆந்திர மாநில செயற்குழு உறுப்பினர் சி.எச்.பாபு ராவ், மாவட்டச் செயலாளர் ஒய்.நேதாஜி மற்றும் ஏராளமான உள்ளூர் மக்கள் கலந்துகொண்டனர்.</p>
