முந்தய பக்கம்

அமுதம் நியாய விலை கடையில் முழு நேர விற்பனையாளரை நியமிக்க கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

16 minutes before
அமுதம் நியாய விலை கடையில் முழு நேர விற்பனையாளரை நியமிக்க கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்
<p><strong>அமுதம் நியாய விலை கடையில் முழு நேர விற்பனையாளரை நியமிக்க கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்</strong></p><p>குழித்துறை, நவ.23 -கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு, வெங்கஞ்சி அமுதம் நியாய விலைக் கடையில் முழு நேர விற்பனையாளரை நியமனம் செய்ய வலியுறுத்தி, சிபிஎம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சிபிஎம் கொல்லங்கோடு வட்டாரக் குழு சார்பில் ரேசன் கடை முன்பு நடந்தஆர்ப்பாட்டத்தில் வட்டாரச்செயலாளர் அஜித் குமார் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்ட செயற்குழுஉறுப்பினர் விஜயமோகனன், விவசாயிகள் சங்க வட்டாரச் செயலாளர் சனல்குமார், கட்டுமான தொழிலாளர் சங்க வட்டாரச் செயலாளர்கிறிஸ்துதாஸ், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க வட்டாரச் செயலாளர் மஞ்சு, விவசாய தொழிலாளர் சங்கவட்டாரச் செயலாளர் ரமேஷ், மீனவர் சங்கம் நிர்வாகி பிராங்கிளின் ஆகியோர் பேசினர்.வட்டாரக் குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram