ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
21 Jun 2026, 1:24 am
<p><strong>ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்</strong></p><p>பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு, தொழிலாளர் நலனுக்கு எதிரான சட்டங்கள் மற்றும் 100 நாள் வேலை திட்ட சிதைப்பு உள்ளிட்ட ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து சிபிஎம் வடசென்னை மாவட்டக்குழு சார்பில் பெரம்பூர், ஆர்.கே.நகர், அம்பத்தூர் ஆகிய மூன்று மையங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக ஆர்.கே.நகரில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.கதிர்வேல், வெ.ரவிக்குமார், டி.வெங்கட் (சிஐடியு) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
