தலைஞாயிறு பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து சிபிஎம் மறியல்
18 Dec 2025, 4:38 pm
<p><strong>தலைஞாயிறு பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து சிபிஎம் மறியல்</strong></p>
<p>நாகப்பட்டினம், டிச.18 - நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு பேரூராட்சியில் காந்தி காலனி உள்ளது. இங்கு ஒடுக்கப்பட்ட மக்கள் குடியிருந்து வருகின்றனர். இப்பகுதியை தொடர்ந்து புறக்கணிக்கும் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதன்கிழமை பேருந்து மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து, தலைஞாயிறு ஒன்றியச் செயலாளர் ராஜகுரு, முன்னாள் ஒன்றியச் செயலாளர் ராஜா, சசிரேகா, வேணு, அலெக்சாண்டர், செந்தில்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கரியாப்பட்டிணம் காவல் ஆய்வாளர் (பொ) நாகலட்சுமி நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்திய பின், போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.</p>
