விலைவாசி உயர்வால் அனைத்து தரப்பு மக்கள் அவதி! நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிபிஎம் ஆர்ப்பாட்டம்
1 hour before

விலைவாசி உயர்வால் அனைத்து தரப்பு மக்கள் அவதி! நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

சேலம், நவ.2-விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திங்களன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் மக்கள் நாள்தோறும் பயன்படுத்தும் அரிசி, பருப்பு, எண்ணெய், வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கும் காலகட்டத்தில் மக்களின் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை சமாளிக்க முடியாமல், சாமானிய மக்களும் மிகுந்த இன்னலுக்குள்ளாகி வருகின்றனர். எனவே, தமிழக அரசு மளிகை மற்றும் காய்கறி பொருட்களின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அத்தியாவசிய பொருட்களை வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திங்களன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, கட்சியின் வடக்கு மாநகரக்குழு உறுப்பினர் ஆர்.கே.சங்கர் தலைமை வகித்தார். இதில், சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.முத்துக்கண்ணன், மாவட்டச் செயலாளர் ஏ. ராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ராஜாத்தி, வடக்கு மாநகரச் செயலாளர் என்.பிரவீன்குமார், வடக்கு மாநகரக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் அருகே கொட்டும் மழையிலும், அரிசி மூட்டைகளை சுமந்து மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டக்குழு உறுப்பினர் கோ.செல்வராசு தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் பி.ராணி, நகரச் செயலாளர் சி.சண்முகம், மாதர் சங்க ஒன்றியச் செயலாளர் ராணி, சாலையோர வியாபாரிகள் சங்க தலைவர் புஷ்பலதா, ஆட்டோ தொழிலாளர் சங்க தலைவர் ஷாஜகான் உட்பட பலர் கலந்து கொண்டனர். பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, ஒன்றியச் செயலாளர் எம்.லட்சுணன் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் பி.டில்லிபாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.அசோகன், எம்.ஆர்.முருகேசன், மூத்த தோழர் ஆர்.ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். குமாரமங்கலம் பேருந்து நிலையம் அருகே, ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ்.லட்சுமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மூத்த தோழர் சுந்தரம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.தமிழ்மணி, சு.சுரேஷ், மோட்டார் சங்க மாவட்டப் பொருளாளர் ஆர்.சக்திவேல், விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் லட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.