அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்
3 Nov 2026, 9:46 pm

அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, நவ.3 -அரிசி, பருப்பு உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்கள், சமையல் எரிவாயு உருளை, பெட்ரோல், டீசல், மருந்துப் பொருட்கள் ஆகியவற்றின் விலை உயர்வு மற்றும் சுங்கச்சாவடி கட்டணக் கொள்ளை ஆகியவற்றைக் கட்டுப்படுத்தத் தவறிய ஒன்றிய, மாநில அரசுகளைக் கண்டித்தும், போர்க்கால அடிப்படையில் விலைவாசியைக் கட்டுப்படுத்த வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செவ்வாயன்று (நவ.3) மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கட்சியின் மேற்குப் பகுதிக்குழு சார்பில் திருச்சி மாவட்டம் தென்னூரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பகுதிக்குழுஉறுப்பினர் சந்திரன் தலைமை வகித்தார். மாநில கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் எஸ். ஸ்ரீதர், மாநகர் மாவட்டச் செயலாளர் கோவி. வெற்றிச்செல்வம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மூத்த தோழர் விஜயலட்சுமி, மாவட்டக்குழு உறுப்பினர் சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.இதேபோன்று மலைக்கோட்டை பகுதிக்குழு சார்பில் மரக்கடையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்குப் பகுதிச் செயலாளர் ஜி.கே. ராமர் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் க.சுவாமிநாதன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரெங்கராஜன் ஆகியோர்கண்டன உரையாற்றினர்.

திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் 10 ஒன்றியங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் பா.கோமதி தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.முருகையன் கண்டன உரையாற்றினார்.திருத்துறைப்பூண்டிதிருத்துறைப்பூண்டி காமராஜர் சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் நகரச்செயலாளர் கே.கோபு தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் கண்டன உரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.என்.முருகானந்தம், கே.ஜி.ரகுராமன், திருத்துறைப்பூண்டி நகரமன்ற துணைத் தலைவர் எம்.ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

குடவாசல்

குடவாசல் வி.பி.சிந்தன் பேருந்து நிலையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.சுந்தரமூர்த்தி தலைமை வகித்து உரையாற்றினார். கொரடாச்சேரி ஒன்றியம் சார்பாக வெட்டாற்று பாலம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர்கே.கோபிராஜ் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.சேகர் உரையாற்றினார்.மன்னார்குடி ஒன்றியத்தில் நகரச் செயலாளர் ஜி.தாயுமானவன், ஒன்றியச் செயலாளர் கே.ஜெயபால் ஆகியோர்தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.பி.ஜோதிபாசு உரையாற்றினார்.

வலங்கைமான் ஒன்றியம் ஆலங்குடி கடைவீதியில் ஒன்றியச் செயலாளர் எஸ்.இளங்கோவன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.கந்தசாமி உரையாற்றினார். நீடாமங்கலத்தில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.இராதா தலைமையில், ஒன்றியச் செயலாளர் டி.ஜான்கென்னடி முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நன்னிலம் ஒன்றியம் பூந்தோட்டம் கடைவீதியில் ஒன்றியச் செயலாளர் தியாகு.ரஜினிகாந்த் தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.வீரபாண்டியன் உரையாற்றினார். முத்துப்பேட்டை ஒன்றியத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.ஜோதிபாசு தலைமையிலும், கோட்டூர் ஒன்றியத்தில் கே.தமிழ்மணி தலைமையிலும் நடைபெற்றது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் அண்ணாசிலை அருகே நூதனப் போராட்டமாக நடைபெற்றது. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தாத ஒன்றிய,மாநில அரசுகளைக் கண்டித்து காதில் பூ வைத்துக்கொண்டு பஜனை பாடியும், சிலிண்டருக்கு மாலை அணிவித்துஒப்பாரி வைத்தும், கும்மி அடித்தும், கண்டன முழக்கங்களை எழுப்பியும் இந்தப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டம் அந்தப் பகுதியினரின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.போராட்டத்திற்கு கட்சியின் புதுக்கோட்டை மாநகரச் செயலாளர் எஸ்.பாண்டியன், போக்குவரத்து இடைக்கமிட்டி செயலாளர் ஆர்.மணிமாறன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ஸ்ரீதர், சு.மதியழகன், மூத்த தோழர் எம்.அசோகன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். அன்னவாசலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒன்றியச் செயலாளர் எஸ்.ரகுபதி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர் கண்டன உரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சண்முகம், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.ஆர்.சுப்பையா உள்ளிட்டோர் பேசினர்.

ஆலங்குடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திருவரங்குளம் மேற்கு ஒன்றியச் செயலாளர் எல்.வடிவேல், கிழக்கு ஒன்றியச் செயலாளர் ஆ.குமாரவேல் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் த.அன்பழகன், கி.ஜெயபாலன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.சுசிலா, எஸ்.பாண்டிச்செல்வி, நகரச் செயலாளர் ஏ.ஆர்.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பேசினர்.

கந்தர்வகோட்டையில் கந்தர்வகோட்டை வடக்கு ஒன்றியச் செயலாளர் ஜி.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ராமையன், மாவட்டக்குழு உறுப்பினர் வி.ரெத்தினவேல் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

அறந்தாங்கி

அறந்தாங்கி அம்மா உணவகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா செயலாளர் நாராயணமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர்கள் தென்றல் கருப்பையா, தங்கராஜ், நகரச் செயலாளர் அலாவுதீன், ஆர்.கர்ணா உள்ளிட்டோர் பேசினர்.

கும்பகோணம்

கும்பகோணம் காந்தி பூங்கா அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் மாநகரச் செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். தஞ்சை மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்ட குழு உறுப்பினர் எம்.கண்ணன், மாமன்ற உறுப்பினர் செல்வம், செயற்குழு உறுப்பினர் அருளரசன், திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சேகர் நாகேந்திரன், மாதர் சங்க மாவட்டத் தலைவர் கே.சுமதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், இலுப்பூர் சங்கரன்பந்தல் கடைவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் ஏ.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் கண்டன உரையாற்றினார். சீர்காழி ஒன்றியம், வைத்தீஸ்வரன் கோவில் கடைவீதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் கரிகாலன்தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் ஏ.வி.சிங்காரவேலன் கண்டன உரையாற்றினார்.

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் கடைத்தெருவில் காய்கறிகளை மாலையாக அணிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து தலைமை வகித்தார். சிபிஎம் நாகப்பட்டினம் நகரக் குழு சார்பில், நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் நகரச் செயலாளர் கே.வெங்கடேசன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி சிறப்புரையாற்றினார். வேதாரண்யம் தெற்கு ஒன்றியக்குழு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் டி.லதா சிறப்புரையாற்றினார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் பேருந்து நிலையத்தில் கட்சியின் ஒன்றியச் செயலாளர் தி. சத்தியசீலன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலாளர் பெ.ரமேஷ் சிறப்புரையாற்றினார். மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜசேகர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் க.முத்து, ஒன்றியக் குழு உறுப்பினர் இலக்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதேபோல் பெரம்பலூர் நகர குழு சார்பாக கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் எம்.கருணாநிதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டங்களில் மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு, பகுதிக் குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.