முந்தய பக்கம்

தொடர் மின்வெட்டு: சிபிஎம் ஆர்ப்பாட்டம்

11 Jun 2026, 11:13 pm
தொடர் மின்வெட்டு: சிபிஎம் ஆர்ப்பாட்டம்
<p><strong>தொடர் மின்வெட்டு: சிபிஎம் ஆர்ப்பாட்டம்</strong></p><p>உதகை, ஜூன் 11- அறிவிப்பில்லாத தொடர் மின்வெட்டை கண் டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். மின்சார வாரியத்தில் ஊழியர்கள் பற்றாக்குறை, பராமரிப்பு பணிகளில் தாமதம், அறிவிப்பில்லாத மின் வெட்டு தொடர்கிறது. காலிப்பணியிடங்களை உடன டியாக நிரப்பி, மக்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்க தமிழக அரசு மற்றும் மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வியாழனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம், உப்பட்டி துணை மின் நிலையம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, கட்சியின் ஏரியா கமிட்டி உறுப்பினர் மாறன் தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர்கள் மணிகண்டன், வர்கீஸ், பன்னீர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் ஏரியா கமிட்டி செயலாளர் ரமேஷ், கிளைச் செயலாளர் கள் பெரியார் மணிகண்டன், ராஜகோபால், ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram