தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: சிபிஎம் ஆர்ப்பாட்டம்

1 Jun 2026, 11:42 pm
பெட்ரோல், டீசல் விலை உயர்வு: சிபிஎம் ஆர்ப்பாட்டம்
<p><strong>பெட்ரோல், டீசல் விலை உயர்வு: சிபிஎம் ஆர்ப்பாட்டம்</strong></p><p>சேலம், ஜூன் 1- ஒன்றிய பாஜக அரசின் பெட்ரோல், டீசல் மற்றும் சி.என்.ஜி. எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், திங்களன்று சேலம் மாவட்டம் ஏற்காடு ஒண்டிக்கடை அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் அத் தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து, சாமானிய பொதுமக்கள் கடுமையாகப் பாதிக் கப்பட்டு வருவது குறித்தும், வணிகப் பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை உயர்வு, உணவகங்கள் மற்றும் சிறு தொழில்களை முற்றிலும் முடக் கும் நிலைக்கு தள்ளியுள்ளதாக குற் றம் சாட்டினர். இந்த விலை உயர்வை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்களை எழுப்பினர். சிபிஎம் தாலுகா செயலாளர் டி.நேரு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ் வில், மாவட்டச் செயலாளர் ஏ.ராம மூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எஸ்.எம்.தேவி ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். திருப்பூர் இதேபோன்று, திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டம், பல்லகவுண்டன் பாளையம் நால்ரோடு பேருந்து நிறுத் தம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் தாலுக்கா கமிட்டி உறுப் பினர் வி.காமராஜ் தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார், தாலுகா செயலாளர் கு.சரஸ்வதி, சிஐ டியு மாவட்டப் பொருளாளர் ஜெ.கந்த சாமி, இன்ஜினியரிங் தொழிலாளர் சங்க தலைவர் ஆர்.பழனிசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர். தாலுக்கா கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.