டீசல், பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்
18 May 2026, 10:45 pm
<p><strong>டீசல், பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்</strong></p><p>நாகர்கோவில்,மே.18- ஏழை நடுத்தர மக்களை பெரிதும் பாதிக்கும் ஒன்றிய பாஜக அரசின் டீசல் பெட்ரோல் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி சிபிஐ எம் ராஜாக்கமங்கலம் ஒன்றியக்குழு சார்பில் திங்களன்று ஈத்தாமொழியில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எஸ். சிவகோபன், ஆர். குமரேசன் ஆகியோர் பேசினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.எஸ்.கண்ணன் முடித்து வைத்து பேசினார். இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
