தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பினராயி விஜயன் இல்லத்தில் அமலாக்கத்துறையின் அராஜக சோதனையைக் கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

29 May 2026, 10:14 pm
பினராயி விஜயன் இல்லத்தில் அமலாக்கத்துறையின் அராஜக சோதனையைக் கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

பினராயி விஜயன் இல்லத்தில் அமலாக்கத்துறையின் அராஜக சோதனையைக் கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

தேனி ,மே 29- கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் இல்லத்தில் ஒன்றிய பாஜக அரசின் ஏவல்படி அமலாக்கத்துறை நடத்திய அராஜக சோதனையை கண்டித்தும், தில்லியில் அறவழியில் போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி,பிருந்தா காரத் உள்ளிட்ட தலைவர்களை தில்லி காவல்துறை யினர் கைது செய்து அவமரியாதை செய்த சம்பவத்தை கண்டித்தும் ஆண்டிபட்டி,மதுரை,கமுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

ஆண்டிபட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ்.மாரி முத்து தலைமை வகித்தார்.

மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.வெங்கடேசன் கண்டன உரை யாற்றினார். ஒன்றிய செயலாளர் (பொறுப்பு) எஸ்.மீனாட்சி சுந்தரம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் தெற்கு பகுதிக்குழு சார்பில் அனுப்பானடி அம்பேத்கர் சிலை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பகு திக்குழு செயலாளர் ஜெ. லெனின் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் மா. கணேசன் கண்டன உரையாற்றினார்.

மாநிலக்குழு உறுப்பினர் இரா. விஜயராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வை. ஸ்டாலின், ஆர். சசிகலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கமுதி இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் தாலுகாச் செயலாளர் எம். ஜீவானந்தம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டக்குழு உறுப்பினர் ஆர். முத்து விஜயன் கண்டன உரை யாற்றினர். தாலுகா குழு உறுப்பி னர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

ஏர்வாடி இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் வெள்ளிக்கிழமை யன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு கடலாடி கிழக்கு தாலுகா குழு உறுப்பினர் நம்பு ராஜன் தலைமை வகித்தார்.

மாவட்டச் செயலாளர் ரெ.குரு வேல், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் நா.கலையரசன், மாவட்டக்குழு உறுப்பினர் வி.முருகன், கடலாடி கிழக்கு தாலுகா குழு செயலாளர் எஸ்.ராமசாமி, தாலுகா குழு உறுப்பி னர்கள் சுப்பிரமணியன், மூத்த தோழர் முருகேசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

அலங்காநல்லூர் மதுரை புறநகர் அலங்கா நல்லூர் ஒன்றியக்குழு சார்பில் அலங்காநல்லூர் கேட்டு கடை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு ஒன்றிய செயலாளர் கே. தவமணி தலைமை வகித்தார்.

மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.பி.இளங்கோவன், மாவட்டக்குழு உறுப்பினர் வி. உமாமகேஸ்வரன், ஒன்றியக்குழு உறுப்பினர் என். கண்ணன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.