விலைவாசியை உயர்த்திய ஒன்றிய பாஜக அரசுக்கு கண்டனம் தேனி, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் சிபிஎம் ஆர்ப்பாட்டம் ஆர்.சச்சிதானந்தம் எம்.பி., கே.பாலபாரதி பங்கேற்பு
19 Jun 2026, 10:00 pm

விலைவாசியை உயர்த்திய ஒன்றிய பாஜக அரசுக்கு கண்டனம் தேனி, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் சிபிஎம் ஆர்ப்பாட்டம் ஆர்.சச்சிதானந்தம் எம்.பி., கே.பாலபாரதி பங்கேற்பு

தேனி ,ஜூன் 19- விலைவாசி உயர்வுக்கு காரணமான ஒன்றிய அரசை கண்டித்தும்,பெட்ரோல், டீசல், கேஸ் விலையை குறைக்க கோரியும்,நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்பு வாபஸ் பெற வேண்டும்,நூறு நாள் வேலை திட்டத்தில் சட்டத் திருத்தத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஜூன் 19 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தேனி தாலுகா செயலாளர் இ.தர்மர் தலைமை வகித்தார் .கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும் ,திண்டுக்கல் மக்களவை உறுப்பினருமான ஆர்.சச்சிதானந்தம், தேனி மாவட்டச் செயலாளர் எம்.இராமச்சந்திரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் கே.ராஜப்பன்,ஏ.வி.அண்ணாமலை,மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.வெங்கடேசன் , டி.கண்ணன் ,ஜி.எம்.நாகராஜன் ,கே.எஸ்.ஆறுமுகம் ,எஸ்.வெண்மணி ,கே.ஆர்.லெனின் ,எம்.வி.முருகன் ,விவசாயத்தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எல்.ஆர்.சங்கரசுப்பு, விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் எஸ்.கே.பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.

சிவகங்கை

சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் அ.சுரேஷ் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னத்துரை கண்டன உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் ஏ.ஆர்.மோகன்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துராமலிங்கபூபதி,பி.முத்துக் கருப்பன் ஆகியோர் பேசினர்.

இளையான்குடி

இளையான்குடி கண்மாய்க்கரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா செயலாளர் ராஜு (பொறுப்பு) தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஏ.ஆர்.மோகன் ,மாவட்ட செயற்குழு உறுப்பினர் அ.சுரேஷ் மாவட்டக்குழு உறுப்பினர் கே.அழகர்சாமி தாலுகா செயலாளர் எஸ்.சந்தியாகு ஆகியோர் பேசினர்.

முதுகுளத்தூர்

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகாமையில் உள்ள மீசல் கிராமத்தில் தாலுகா குழு செயலாளர் கே.கணேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் தி.இராஜா, மாவட்டக்குழு உறுப்பினர் வி.முருகன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இராஜபாளையம்

இராஜபாளையம் கிழக்கு ஒன்றியம் சத்திரப்பட்டி நடுத்தெருவில் ஒன்றிய செயலாளர் முனியாண்டி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் அ .குருசாமி துவக்கி வைத்துப் பேசினார். மத்தியக்குழு உறுப்பினர் கே. பாலபாரதி கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் பலர் பங்கேற்றனர்.

இராமேஸ்வரம்

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டக்குழு உறுப்பினர் கே.சுமதி தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் மாரியப்பன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் க.கருணாகரன், தாலுகா குழு செயலாளர் ஜி.சிவா, மாவட்டக்குழு உறுப்பினர்கள் இ.ஐஸ்டின், ஏ.ஆரோக்கிய நிர்மலா ஆகியோர் பேசினர்.

சாயல்குடி

இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் தாலுகா குழு உறுப்பினர் ஆர்.பெருமாள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் நா.கலையரசன், கடலாடி மேற்கு தாலுகா குழு செயலாளர் எஸ்.தங்கச்சாமி, தாலுகா குழு உறுப்பினர் ஏ.பொன் முருகன் ஆகியோர் பேசினர்.