தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பொது வேலைநிறுத்தம் மாபெரும் வெற்றி இந்திய தொழிலாளர் வர்க்கத்திற்கு சிபிஎம் அரசியல் தலைமைக்குழு வாழ்த்து!

12 Feb 2026, 3:51 pm
பொது வேலைநிறுத்தம் மாபெரும் வெற்றி இந்திய தொழிலாளர் வர்க்கத்திற்கு சிபிஎம் அரசியல் தலைமைக்குழு வாழ்த்து!
<p><strong>பொது வேலைநிறுத்தம் மாபெரும் வெற்றி இந்திய தொழிலாளர் வர்க்கத்திற்கு சிபிஎம் அரசியல் தலைமைக்குழு வாழ்த்து!</strong></p> <p>புதுதில்லி, பிப். 12 - அகில இந்திய பொது வேலைநிறுத்தத்தை மகத் தான வெற்றிபெறச் செய்த &nbsp;தொழிலாளர் வர்க்கத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு, வாழ்த்துக்களையும் பாராட்டு தல்களையும் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: வியாழக்கிழமை (பிப்.12), &nbsp;வெற்றிகரமாக நடைபெற்ற &nbsp;பொது வேலைநிறுத்தத்திற் காக, நமது நாட்டின் தொழிலா ளர் வர்க்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் &nbsp;தலைமைக்குழு வாழ்த்துகிறது. &nbsp;தொழிலாளர்கள்-விவசாயிகள் ஒன்றுபட்ட போராட்டம்! தொழிலாளர்க்கு விரோத மான நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகள், மகாத்மா &nbsp;காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உத்தரவாதச் சட்டம் &nbsp;ரத்து உள்பட பாஜக தலைமையி லான ஒன்றிய அரசின் பிற &nbsp;தொழிலாளர் விரோத - விவசாயி கள் விரோத மற்றும் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக, விவசாயிகளும் விவ சாயத் தொழிலாளர்களும், தொழிலாளர் வர்க்கத்துடன் இணைந்து மாபெரும் போ ராட்டத்தை நடத்தியுள்ளனர். தொழிலாளர் வர்க்கம் தனது &nbsp;குரலை உரக்கவும் தெளிவாக வும் ஒலித்துள்ளது. &nbsp;இவ்வாறு போராடும் தொழி லாளர்கள் - விவசாயிகள் மற்றும் &nbsp;விவசாயத் தொழிலாளர்களு டன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றுபட்டு நிற்கிறது என் பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறது. தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்பப் பெறுக! தொழிலாளர்களுக்கு விரோ தமான நான்கு தொழிலாளர் தொகுப்புகளையும் ஒன்றிய அரசாங்கம் உடனடியாக ரத்து &nbsp;செய்ய வேண்டும்; தங்களின் &nbsp;வீரஞ்செறிந்த போராட்டங் களால் தொழிலாளர்கள் ஏற் கெனவே வென்றெடுத்த உரி மைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்; மகாத்மா காந்தி தேசிய &nbsp;ஊரக வேலை உறுதித்திட்டத் திற்கு மாற்றாக கொண்டுவரப் பட்டுள்ள &lsquo;விக்சித் பாரத் ஜி &nbsp;ராம் ஜி&rsquo; சட்டம் ரத்து செய்யப்பட &nbsp;வேண்டும், மின்சார விநியோ கத்தைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் திட்டம் ரத்து செய் யப்பட வேண்டும், விதை சட்ட முன்வடிவு ரத்து செய்யப்பட வேண்டும், குறிப்பாக இந்திய தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் பொதுவாக மக்களின் &nbsp;நலன்களுக்கு தீங்கு விளை விக்கும் விதத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுடன் கை யெழுத்திட்ட பல்வேறு தன்னிச் சையான வர்த்தக ஒப்பந்தங்களி லிருந்தும் விலக வேண்டும். &nbsp;இந்த கோரிக்கைகளை வலி யுறுத்தியே வியாழனன்று மாபெரும் வேலைநிறுத்தம் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. &nbsp;ந.நி.)</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.