இடுவாய் மக்களுக்கு பட்டா வழங்க ஆட்சியரிடம் சிபிஎம் மனு
9 Feb 2026, 3:02 pm
<p><strong>இடுவாய் மக்களுக்கு பட்டா வழங்க ஆட்சியரிடம் சிபிஎம் மனு</strong></p>
<p>திருப்பூர், பிப்.9- திருப்பூர் தெற்கு தாலுகா, இடு வாய் ஊராட்சிக்குட்பட்ட எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் வசிக்கும் 23 குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடை பெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் மனு அளிக்கப்பட்டது. இடுவாய் எம்.ஜி.ஆர் நகரில் வசிக்கும் 12 குடும்பங்களுக்கு பட்டா வழங்கக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வரு கின்றனர். இதன் விளைவாக, கடந்த 2024-ஆம் ஆண்டு அப்பகுதியின ருக்கு மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்புகள் பெற்றுத் தரப்பட் டன. இதனைத் தொடர்ந்து, தகுதி யுள்ள 12 பயாளிகளுக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி ஆட்சியரிடம் மீண்டும் வலியுறுத் தப்பட்டது. மனுவைப் பரிசீலித்த மாவட்ட ஆட்சியர், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு திருப்பூர் தெற்கு வட்டாட்சியருக்கு உடனடியாகப் பரிந்துரை செய் தார். அதேபோல், கடந்த 2008-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டாக்களில், 11 குடும்பங்களைச் சேர்ந்த பயனாளிகளின் பெயர்கள் தவறாக பதிவாகியுள்ளன. அந்தப் பிழைகளை திருத்தி, அவர்களின் பெயரிலேயே புதிய பட்டா வழங்க வும் கோரிக்கை விடுக்கப்பட்டது.இந்த மனு அளிக்கும் இயக்கத் தில், மார்க்சிஸ்ட் கட்சியின் பாரதி புரம் கிளைச் செயலாளர் ஏ.கே.ராம மூர்த்தி, இடுவாய் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரும், தெற்கு ஒன்றியச் செயலாளருமான கே. கணேசன் மற்றும் பயனாளிகள் உடனிருந்தனர். இதேபோன்று, பல்லடம் ஒன்றி யம் சுக்கம்பாளையம் கிராம ஊராட் சிக்குட்பட்ட காளிவேலம்பட்டி கிரா மத்தில், 30க்கும் மேற்பட்ட குடும்பத் திற்கு இலவச வீட்டுமனைப் பட்டா கோரி, சிபிஎம் காளிவேலம்பட்டி கிளைச் செயலாளர் நாகராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியரி டம் திங்களன்று மனு அளித்தனர்.</p>
