கம்மாபுரத்தில் மனைப் பட்டா கேட்டு சிபிஎம் மனு கொடுக்கும் இயக்கம்
20 Feb 2026, 2:39 pm
<p><strong>கம்மாபுரத்தில் மனைப் பட்டா கேட்டு சிபிஎம் மனு கொடுக்கும் இயக்கம்</strong></p>
<p>கடலூர், பிப். 20- கம்மாபுரம் ஒன்றியத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இலவசக் குடிமனைப் பட்டா வழங்கக் கோரியும், வருவாய்த்துறை அதிகாரிகளைக் கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் ஆர். கலைச்செல்வன் தலைமை தாங்கினார். பாலக்கரையில் இருந்து பேரணியாகச் சென்றபோது போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இறுதியில் விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் 500-க்கும் மேற்பட்ட மனுக்கள் அளிக்கப்பட்டன. இதில் மாவட்டச் செயலாளர் ஜி. மாதவன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ் பாபு,மாவட்ட குழு உறுப்பி னர் டி.ஜெயராமன், பழங்குடி மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் என்.எஸ். அசோகன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் கே.அன்புச்செல்வி, யூ.சுந்தரவடிவேல், ஆர். கோவிந்தன், எஸ்.கனகராஜ் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.</p>
