பேருந்து நிலையத்தில் கடை வைக்க அனுமதி வழங்கக்கோரி சிபிஎம் மனு
15 Nov 2025, 4:09 pm
<p><strong>பேருந்து நிலையத்தில் கடை வைக்க அனுமதி வழங்கக்கோரி சிபிஎம் மனு</strong></p>
<p>தருமபுரி, நவ.15- பேருந்து நிலையத்தில் சிறு பழக்கடைகள் வைத்து கொள்ள அனுமதி வழங்கக்கோரி ஆட்சி யரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு அளித்தனர். தருமபுரி பேருந்து நிலை யத்தில், கடந்த 40 வருடங்க ளாக சாலையோரமாக சிறிய கடைகள் வைத்து பலர் வியாபாரம் செய்து வரு கின்றனர். குறிப்பாக, நகர பேருந்து நிலை யத்தின் ஒதுக்குப்புறத்தில் 50க்கும் மேற் பட்ட சிறு வியாபாரிகள் பழக்கடை வைத்துள் ளனர். இவர்களுக்கு சாலையோர வியாபரி கள் என அடையாள அட்டை வழங்கப்பட்டுள் ளது. சிறிய வியாபாரத்தை நம்பி வாழ்ந்து வரும் இந்த வியாபரிகளுக்கு வேறு எந்த வருவாயும் இல்லை. ஏற்கனவே இருந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் நகராட்சி ஆனைய ரால் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். தற்சமயம் தருமபுரி நகராட்சி நிர்வாகத் தினர், கடந்த நவ.12 அன்று முதல் கடை வைக்கக்கூடாது என நெருக்கடி செய்து வருகின்றனர். எனவே, சிறு பழக்கடை வியா பாரிகளின் நலன் கருதி, கடை வைத்துக் கொள்ள அனுமதிக்க வழங்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர் மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷிடம் மனு அளித்தனர். இந்நிகழ்வில், கட்சியின் மாவட் டச் செயலாளர் இரா.சிசுபாலன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் டி.எஸ்.ராமச்சந்திரன், ஏ. ஜெயா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
