மக்கள் பிரச்சனையை எதிரொலிக்க ஏற்ற இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி சிபிஎம் மனு
6 Nov 2026, 12:51 am

மக்கள் பிரச்சனையை எதிரொலிக்க ஏற்ற இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி சிபிஎம் மனு

உடுமலை, நவ.5- உடுமலை மத்திய பேருந்து நிலையம் எதிரே உள்ள கால்நடை மருத்துவமனை முன்பு அரசியல் கட்சிகள் மற்றும்பொதுநல அமைப்புகள் ஆர்ப்பாட்டம்நடத்த மீண்டும் அனுமதி வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

உடுமலை மத்திய பேருந்து நிலையம் எதிரே உள்ள கால்நடை மருத்துவமனை முன்பு, கடந்த காலங்களில் பல்வேறு மக்கள் பிரச்சனைகளை முன்னிறுத்தி அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வந்தன. இந்த இடம் போக்குவரத்திற்கு பெரிய அளவில் இடையூறு ஏற்படாத வகையிலும் அமைந்துள்ளது. மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காண, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் இங்கு நடைபெற்ற போராட்டங்கள், பொதுமக்களிடம் நேரடியாக செய்திகளை கொண்டு சேர்க்கும் களமாகஇருந்து வந்தன. ஆனால், தற்போது, மேம்பாலம் அருகே உள்ள நகராட்சிஅலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகிறது. இங்கு பொதுமக்களின் நடமாட்டம் குறைவாக இருப்பதால்,யாருக்காக போராட்டங்கள் நடத்தப்படுகிறதோ அந்த பகுதி மக்களின் கவனத்திற்கு செல்வதில்லை. மேலும்,மேம்பாலம் அருகே ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்போது சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

எனவே, பொதுமக்களின் நலனையும், போக்குவரத்து நெருக்கடியையும்கருத்தில் கொண்டு, உடுமலைப்பேட்டை மத்திய பேருந்து நிலையம்எதிரே உள்ள கால்நடை மருத்துவமனை முன்பு, உரிய விதிமுறைகள் மற்றும் போக்குவரத்து பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தமீண்டும் அனுமதி வழங்க மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.