சிபிஎம் தலைமையில் ஆட்சியரிடம் மனு கொடுக்கும் இயக்கம்
17 Aug 2026, 10:53 pm

சிபிஎம் தலைமையில் ஆட்சியரிடம் மனு கொடுக்கும் இயக்கம்

திருச்சிராப்பள்ளி, ஆக. 17- திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம், கம்பரசம்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட கூடலூர் கிராமத்தில் ஆதிதிராவிட நலத்துறையின் சார்பாக 31 ஆண்டுகளுக்கு முன்பு ஏழை மக்களுக்கு இலவச நிலம் வழங்கப்பட்டது.

இந்த நிலங்களை உடனடியாக மறு அளவீடு செய்து, பயனாளிகளுக்கு உரிய பட்டா வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இதுநாள் வரை மறு அளவீடு செய்து வழங்கப்படவில்லை. எனவே, நிலம் வழங்கப்பட்ட மக்களுக்கு உரிமையை உறுதி செய்யவும், நிலத்தை மறு அளவீடு செய்து உடனடியாக பட்டா வழங்கக்கோரியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில், கூடலூர் ஊர் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் இயக்கம் திங்கட்கிழமை நடைபெற்றது.

இந்த மனு கொடுக்கும் இயக்கத்திற்கு, ஒன்றியக் குழு உறுப்பினர் முருகன் தலைமை தாங்கினார். கோரிக்கை மனுவை, மாவட்ட ஆட்சியரிடம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் லெனின், ஒன்றியச் செயலாளர் கருணாநிதி மற்றும் கூடலூர் ஊர் பொதுமக்கள் வழங்கினர்.