முந்தய பக்கம்

மதுக்கடைகளை மூடக்கோரி சிபிஎம் மனு

14 May 2026, 11:35 pm
மதுக்கடைகளை மூடக்கோரி சிபிஎம் மனு
<p><strong>மதுக்கடைகளை மூடக்கோரி சிபிஎம் மனு</strong></p><p>சேலம், மே 14- தமிழக அரசின் புதிய ஆணைப்படி, டவுனில் கோகுலநாத பள்ளி மிக அருகே 50 மீட்டர் தொலைவில் உள்ள மதுக்கடையை மூட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி சேலம் ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். சேலம் மத்திய பேருந்து நிலையம் அருகே 200 மீட் டர் தொலைவில் 5 மதுக்கடைகள் இருந்துவந்நதது. இக்கடைகளினால் பொதுமக்களுக்கும், போக்குவரத் திற்கும் பல்வேறு இன்னல்கள் நிகழ்ந்த காரணத்தால் இந்த மதுக்கடைகளை அகற்ற வலியுறுத்தி கடந்த 9 ஆண்டுகளாக பொதுமக்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், ஜன நாயக மாதர் சங்கம் போன்ற அமைப்புகள் பல்வேறு முறையீடுகள் போரட்டங்கள் நடத்தினார்கள். இந்நிலையில் புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழ அரசின் புதிய ஆணையின் படி, வழிபாட்டு தலங்கள், கல்விநிலையங்கள், பேருந்துநிலையங்கள் ஆகி யவை உள்ள இடங்களில் இருந்து 500மீட்டர் தொலை வில் எந்தவொரு மதுக்கடைகளும் இருக்ககூடாது. ஆனால் மேற்படி சேலம் மத்திய பேருந்துநிலையம் அருகே உள்ள மதுக்கடைகளில் இரண்டை மட்டுமே மூடியுள்ளனர். மற்ற மூன்று மதுக்கடைகளையும் உடனே மூட வேண்டும். அதேபோல சொர்ணபுரி பகு தியில் உள்ள மதுக்கடை மாநகராட்சி பள்ளிக்கு அருகே 150 மீட்டர் தொலைவில் உள்ளது. சேலம் டவு னில் கோகுலநாத பள்ளி மிக அருகே 50 மீட்டர் தொலைவில் மதுக்கடை உள்ளது. இது அனைத்தை யும் புதிய ஆணைப்படி அகற்ற வேண்டுமென மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சேலம் மாநகரச் செய லாளர் என்.பிரவீன்குமார் தலைமையில், வியாழ னன்று சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக் கப்பட்டது. உடன் மாநகரக்குழு உறுப்பினர்கள் வி. வெங்கடேஷ், ஆர்.கே.சங்கர், பி.ராஜேஷ்குமார் உட் பட பலர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram