சிவகங்கை மாவட்டத்தில் படுகொலைகளைத் தடுத்திடுக! தமிழக முதல்வருக்கு சிபிஎம் மனு
29 Oct 2026, 9:24 pm

சிவகங்கை மாவட்டத்தில் படுகொலைகளைத் தடுத்திடுக! தமிழக முதல்வருக்கு சிபிஎம் மனு

சிவகங்கை, அக்.29-சிவகங்கை மாவட்டத் தில் அதிகரித்து வரும் படுகொலைகளைத் தடுத்து, சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ரெ.மோகன், தமிழக முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளார்.அந்த மனுவில், கடந்த ஓராண்டாக மாவட்டத்தில் பல்வேறு படுகொலைகள் நடைபெற்று வருவதாகவும், கடந்தநான்கு மாதங்களில் சிவகங்கை நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் ஏழு படுகொலைகள் நடந் துள்ளதாகவும் குறிப்பிட்டுள் ளார்.

இளைஞர்கள் சிலர் ரவுடிக் கும்பல்களாகச் செயல்படுவதும், கூலிப் படையினராக ஈடுபடுவதும்அதிகரித்துள்ளதாகவும், சமூக வலைதளங்களில் ஆயுதங்களுடன் காணொலிகளைப் பதிவிட்டு மிரட்டல் விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என் றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், காவல்துறையைப் பலப்படுத்தி, காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். குற்றச் செயல் களில் ஈடுபடுவோர் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக வலைதளங்களில் வெறுப்புப் பேச்சு மற்றும் மிரட்டல்களில் ஈடுபடுவோரைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என் றும் கோரியுள்ளார்.

சிவகங்கை நகரம் மற்றும் சுற்றுவட்டாரக் காவல் நிலையங்களில் காவலர் களின் எண்ணிக்கையை அதிகரித்து, படுகொலைகளைத்தடுத்து, பொதுமக்கள் அச்சமின்றி வாழ்வதற்குத் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.