தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஜோதி நகர் மக்களுக்குக் குடிமனைப் பட்டா வழங்கக் கோரி சிபிஎம் மனு

1 hour before
ஜோதி நகர் மக்களுக்குக் குடிமனைப் பட்டா  வழங்கக் கோரி சிபிஎம் மனு

ஜோதி நகர் மக்களுக்குக் குடிமனைப் பட்டா வழங்கக் கோரி சிபிஎம் மனு

திருவள்ளூர், நவ. 23-ஊத்துக்கோட்டை வட்டம் மாளந்தூர் ஊராட்சி ஜோதி நகரில் வசிக்கும் 25 குடும்பங்களுக்குக் காப்புக்காடு நிலத்தை வகை மாற்றம் செய்து குடிமனைப் பட்டா வழங்கக் கோரி சிபிஎம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் திங்களன்று மனு அளிக்கப்பட்டது.

மாளந்தூர் ஊராட்சியில் அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள காப்புக்காடு சர்வே எண் 222-இல் வசிக்கும் 81 குடும்பங்க ளுக்கு ஏற்கனவே குடிமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அதே சர்வே எண்ணில் உள்ள ஜோதி நகரில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் 25 குடும்பங்களுக்குப் பட்டா வழங்கப்படாமல் விடுபட்டுள்ளது. மின் இணைப்பு, சாலை வசதி, அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைக்கப்பட்டு, வீட்டு வரி செலுத்தி ஆதார் மற்றும் குடும்ப அட்டைகளை வைத்துள்ள இப்பகுதிமக்களை வெளியேறுமாறு வனத்துறையி னர் தொடர்ந்து நோட்டீஸ் வழங்கி வரு கின்றனர்.

எனவே, மக்கள் பயன்பாட்டில் உள்ள இந்நிலத்தை வகை மாற்றம் செய்து விடுபட்ட 25 குடும்பங்களுக்கும் குடி மனைப் பட்டா வழங்க வலியுறுத்தித் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இதில் மாளந்தூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் வி.விஜயன், சிபிஎம் ஊத்துக்கோட்டை வட்டக் குழு உறுப்பினர் டி.குமார் மற்றும் கிராம மக்கள் பாபு, வேலு, சைமன், முனியம்மா, கௌரி, கன்னியம்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.