தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

15 ஆண்டுக்கு முன் பெற்ற பட்டாவை வகை மாற்றம் செய்து தர சிபிஎம் கோரிக்கை

2 Sept 2026, 10:37 pm
15 ஆண்டுக்கு முன் பெற்ற பட்டாவை வகை மாற்றம் செய்து தர சிபிஎம் கோரிக்கை

15 ஆண்டுக்கு முன் பெற்ற பட்டாவை வகை மாற்றம் செய்து தர சிபிஎம் கோரிக்கை

திருப்பூர், செப்.2-வாவிபாளையத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்பு பட்டா வழங்கப்பட்ட சந்தை புறம்போக்கு பகுதியை, நத்தமாக வகை மாற்றம் செய்யக்கோரி திருப்பூர் வடக்கு வட்டாட்சியரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு அளித்தனர்.

திருப்பூர் வடக்கு வட்டம், நெருப்பெரிச்சல் கிராமம், வாவிபாளையம் 2061/1 சந்தை புறம்போக்கு பகுதியாக இருந்த இடத்தில், 40 ஆண்டுகளாக வீடு கட்டி குடியிருந்து வரும் 15 குடும்பங்களுக்கு 2010 இல் பட்டா வழங்கப்பட்டது.

ஆனால், அப்பகுதி தற்போது வரை வருவாய்த்துறை ஆவணங்களில் சந்தை புறம்போக்கு என்றே தொடர்ந்து வருகிறது. நத்தமாக வகை மாற்றம் செய்யப்படவில்லை. இதன் காரணமாக பயனாளிகள் அந்த இடத்தின் பட்டாவை வைத்து பத்திரப்பதிவு செய்வதற்கும், வங்கிக்கடன் வாங்கவோ வேறு தேவைகளுக்கு பயன்படுத்த முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

நத்தமாக வகை மாற்றம் செய்து தரக்கோரி தொடர்ந்து பலமுறை முயற்சித்தும், மாற்றம் செய்யப்படவில்லை. இந்நிலையில், செவ்வாயன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.காளியப்பன், மாவட்டக்குழு உறுப்பினர் ஆ.சிகாமணி ஆகியோர் தலைமையில், வாவிபாளையம் பகுதியில் பதினைந்து குடும்பங்களை சார்ந்த பயனாளிகள் வட்டாட்சியரிடம் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட வட்டாட்சியர் உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.