தேங்கிக் கிடக்கும் பிரச்சனைகள்; சிபிஎம் மனு
1 hour before

தேங்கிக் கிடக்கும் பிரச்சனைகள்; சிபிஎம் மனு

திருப்பூர், ஜூலை 31-திருப்பூர் மாநகராட்சி, 17, 19 மற்றும் 20 ஆவது வார்டுக்குட்பட்ட பகுதிகளில்மக்களின் அடிப்படை பிரச்சனைகள் குறித்து இரண்டாவது மண்டலத் தலைவர் தம்பி கோவிந்தராஜிடம், மார்க்சிஸ்ட் கட்சியினர் வெள்ளியன்று மனு அளித்தனர்.குறிப்பாக, குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்துவது, தினசரி வீடுகளில் குப்பையை சேகரிப்பது, எரியாத தெரு விளக்குகளை சீரமைப்பது, நீண்ட காலமாக தூர்வாரப்படாத சாக்கடைகளை தூய்மைப்படுத்துவது, பழுதடைந்த சாலைகளை செப்பனிடுவது, நகர் நல மையங்களில் மருத்துவர்கள், தேவையான மருந்துகள் இருப்பதைஉறுதி செய்வது, பள்ளிக்கூடம் உட்பட மக்கள்நெருக்கம் மிகுந்த பகுதிகளில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை அகற்றுவது, பள்ளிக்கூட பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதை புழக்கத்தை தடுப்பது, சமூக விரோத செயல்களை தடுப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அந்தந்த வார்டுகளின் கிளைகள் சார்பில் மனுஅளிக்கப்பட்டது.இந்த மனு அளிக்கும் இயக்கத்தில், கட்சியின் வடக்கு மாநகரச் செயலாளர் பா.சௌந்தரராசன், மாநகரக்குழு உறுப்பினர்கள் பி.மனோகரன், எஸ்.ராஜேந்திரன், பொன்.பாலகுமாரன், தமிழ்வாணன், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் இ.பி.ஜெயகிருஷ்ணன், மரிய சிசிலியா, கிளைச் செயலாளர்கள் விழிப்பு எம்.நடராஜன்கம்யூனிஸ்ட் மணி, ஆர்.மாணிக்கம், தண்டபாணி, ரமேஷ்பாபு, கார்த்திக் பாபு, சாந்தாமணி, வைரமூர்த்தி,சுகுமார் உள்பட 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.