தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தவணை பணம் செலுத்தியவர்களுக்கு வீட்டுமனை கிரையம் செய்து தர சிபிஎம் மனு

1 hour before
தவணை பணம் செலுத்தியவர்களுக்கு  வீட்டுமனை கிரையம் செய்து தர சிபிஎம் மனு

தவணை பணம் செலுத்தியவர்களுக்கு வீட்டுமனை கிரையம் செய்து தர சிபிஎம் மனு

திருப்பூர், அக்.12 –பணத்தை பெற்றுக்கொண்டு கிரையம் செய்து கொடுக்காமல் அலைகழிக்கும் நபரின் மீது நடவடிக்கை எடுத்து வீட்டுமனை கிரையம் செய்து தர வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

திருப்பூர் முதலிபாளையம் ஊராட்சி செந்தில் நகர் பகுதியில் 2016 முதல் 120 குடும்பங்கள் தவணை திட்டத்தில் வீடு வாங்கி வசித்து வருகிறார்கள். ரூ. 2 லட்சம் முதல் 5 லட்சம் வரை பணம் செலுத்தி உள்ளனர். பணம் பெற்றுக் கொண்டு பாலகிருஷ்ணன் என்பவர்

பத்திர பதிவில்லாத கிரைய அக்ரிமென்ட் கொடுத்துள்ளார். பின்னர், மீதம் பணம் செலுத்தினால் கிரையம் செய்து கொடுப்பதாக கூறி விட்டு ஒருவருக்கும் கிரையம் செய்து தரவில்லை.

ஒவ்வொரு முறை சென்று கேட்கும்போதும் கூடுதல் பணம் கேட்டு கிரையம் செய்து கொடுக்காமல் காலம் தாழ்த்துகிறார். மக்களுக்கு உடனடியாக கிரையம் செய்து கொடுக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு கொடுக்கப்பட்டது.

பொதுமக்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர 3 வது மண்டல செயலாளர் த. ஜெயபால், மண்டல கமிட்டி உறுப்பினர்கள் எம். மகேஷ், ஏ.செல்வன், ஹவுசிங் யூனிட் குமரேசன், நெசவாளர் காலனி மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.