கிடப்பில் போடப்பட்ட சாக்கடைப் பணி பொதுமக்கள் பாதிப்பு: சிபிஎம் மனு!
21 Jun 2026, 2:22 am
<p><strong>கிடப்பில் போடப்பட்ட சாக்கடைப் பணி பொதுமக்கள் பாதிப்பு: சிபிஎம் மனு!</strong></p><p>அவிநாசி, ஜூன் 20- திருமுருகன்பூண்டி நகராட்சி, அம்மா பாளையம் 27-ஆவது வார்டு பகுதியில் நான்கு மாதங்களாகச் சாக்கடை அமைக்கும் பணி முழுமையடையாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில், உடனடியாக இப்பணியை துவக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியினர் வெள்ளியன்று நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்தனர். திருமுருகன்பூண்டி நகராட்சிக் குட்பட்ட அம்மாபாளையம் திருப்பூர் முக்கிய சாலையில் சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளம் பல மாதங் களாக மூடப்படாமல் உள்ளது. இத னால், சாலையின் ஒரு பகுதி முற்றிலும் முடங்கியுள்ளது. அப்பள்ளத்தில் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு, கொசுக்கள் உற்பத்தியாகி கடுமையான சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. மேலும், போதிய பாதுகாப்பு எச்சரிக்கைப் பலகைகள் இல்லாததால் பாதசாரிகள், முதியவர்கள், பள்ளி மாணவர்கள் மற் றும் இருசக்கர வாகன ஓட்டிகள், குறிப் பாக இரவு நேரங்களில் விபத்து அச்சத் துடன் பயணிக்கும் அவலநிலை உள் ளது. இதனால் அப்பகுதி வணிக நிறுவனங்களுக்கு வரும் பொது மக்களும் பெரும் சிரமத்திற்குள்ளாகி யுள்ளனர். எனவே, இப்பணியை விரைந்து முடித்து சாலையை சீரமைக்கக் கோரி, சிபிஎம் ஒன்றியக் குழு உறுப்பினர் பால சுப்பிரமணியம் தலைமையில் நகராட்சி பொறியாளரிடம் மனு அளிக்கப்பட்டது. மேலும், தேர்தல் முடிந்து நகரமன்ற கூட்டம் கூட்டாமல் உள்ளது. மக்கள் பிரச்சினையை தீர்க்க நகர மன்ற கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என அம்மாபாளையம் மார்க் சிஸ்ட் கட்சியின் கிளை வலியுறுத் தியுள்ளது. இந்நிகழ்வில் ஒன்றியக் குழு உறுப்பினர் வெங்கடாசலம், கிளைச் செயலாளர் ராஜ், தமுஎகச துணைத் தலைவர் ஈஸ்வரன், வாலிபர் சங்க ஒன்றியத் தலைவர் சந்தோஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மனுவைப் பெற்றுக் கொண்ட பொறியாளர், இப்பிரச்சினை குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.</p>
