தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அண்ணா நூற்றாண்டு அரங்கத்தை வணிக நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடக்கூடாது தஞ்சை மாநகராட்சி துணை ஆணையரிடம் சிபிஎம் மனு

5 Jun 2026, 10:45 pm
அண்ணா நூற்றாண்டு அரங்கத்தை  வணிக நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடக்கூடாது தஞ்சை மாநகராட்சி துணை ஆணையரிடம் சிபிஎம் மனு

அண்ணா நூற்றாண்டு அரங்கத்தை வணிக நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடக்கூடாது தஞ்சை மாநகராட்சி துணை ஆணையரிடம் சிபிஎம் மனு

தஞ்சாவூர், ஜுன் 5- தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தை வணிகப் பயன்பாட்டிற்கு வாடகைக்கு விடக்கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், மாநகராட்சி துணை ஆணையரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாநகரக் குழு சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவில், “தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கம் என்பது, முற்றிலும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மட்டுமே கட்டப்பட்டதாகும். இது பல்வேறு சமூக நல நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள் மற்றும் மக்கள் சார்ந்த நிகழ்வுகளுக்காகவே அனுமதிக்கப்பட்டு வருகிறது. இந்த அரங்கம் இதுவரை எந்தவொரு வணிகப் பயன்பாட்டிற்கும் அனுமதிக்கப்பட்டதில்லை.

இந்நிலையில், இந்த அரங்கத்தை வாரக் கணக்கிலும், மாதக் கணக்கிலும் வணிக நிறுவனங்களின் கண்காட்சிகள் மற்றும் விற்பனைக் கூடங்களுக்கு வாடகைக்கு விடும் சூழல் உரு

வானால், அது அண்ணா நூற்றாண்டு அரங்கம் கட்டப்பட்டதற்கான முதன்மை நோக்கத்தை முற்றிலும் சிதைத்துவிடும். எனவே, பொதுமக்களின் நலனையும், அரங்கத்தின் நோக்கத்தையும் கருத்தில் கொண்டு, வணிகப் பயன்பாட்டிற்காகச் செயல்படும் தனியார் நிறுவனங்களுக்கு இந்த அண்ணா நூற்றாண்டு அரங்கத்தை எக்காரணம் கொண்டும் வாடகைக்கு விடக்கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது’’ என கூறப்பட்டுள்ளது. இக்கோரிக்கையை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி. செந்தில்குமார் தலைமையில், மாவட்டக் குழு உறுப்பினர் என்.

குருசாமி, முன்னாள் மாமன்ற உறுப்பினர் த. முருகேசன், மாநகரக் குழு உறுப்பினர்கள் சி. ராஜன், கோஸ்கனி ஆகியோர் தஞ்சாவூர் மாநகராட்சி துணை ஆணையரை நேரில் சந்தித்து, கோரிக்கை மனுவை அளித்தனர். இந்த மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக துணை ஆணையர் உறுதி அளித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.