பட்டியலின மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கும் இயக்கம்
25 Sept 2026, 12:41 am

பட்டியலின மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கும் இயக்கம்

திருவண்ணாமலை,செப்23-திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம் ரெட்டிக்குப்பம் ஆதிதிராவிடர் காலனியில் 36 குடும்பங்களுக்கு 2004ஆம் ஆண்டு பட்டா வழங்கப்பட்டு 22 ஆண்டுகளாக அளந்து கொடுத்து எல்லை காட்டவில்லை.

இதுகுறித்து வருவாய்த்துறை யும் நில அளவைத்துறையும் இணைந்து நடவடிக்கை எடுத்து கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெரணமல்லூர் வட்டாரக்குழு சார்பில் ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியர் தமிழ்மணியிடம் மனு அளிக்கப்பட்டது.

மேலும் அரியபாடி கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தி வரும் மயானத்திற்கு பாதை இல்லாமையால் விளைநிலங்கள் வழியாக சவம் எடுத்துச் செல்லும் அவலநிலை நீடிக்கிறது. இது குறித்துப் பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இதில் தனி கவனம் செலுத்தி மயானப் பாதை அமைத்துக் கொடுக்க வலியுறுத்தியும் மனு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் எம்.சிவக்குமார், மாவட்டச் செயலாளர் ப.செல்வன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பெரணமல்லூர் சேகரன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கா. யாசர் அராபத், எஸ்.சுகுணா பெரணமல்லூர் வட்டார செயலாளர் ந.பிரபாகரன் மற்றும் பயனாளிகள் பங்கேற்றனர்.