தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பட்டியலின மக்களுக்கு நிரந்தர பாதை கேட்டு சிபிஎம் மனு

26 Sept 2026, 1:22 am
பட்டியலின மக்களுக்கு நிரந்தர பாதை கேட்டு சிபிஎம் மனு

பட்டியலின மக்களுக்கு நிரந்தர பாதை கேட்டு சிபிஎம் மனு

சேலம், செப்.25-பட்டியலின மக்களுக்கு நிரந்தர பாதை வசதிஅமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.ராமமூர்த்தி அளித்துள்ள மனுவில், சீலாக்கரடு காட்டுவளவு ராமன் நகரில் பட்டியலினத்தை சேர்ந்த மக்கள் நான்கு தலைமுறைகளாக வசித்து வருகின்றனர். அவர்கள் ரேசன்அட்டை, வாக்காளர் அட்டை, மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு உள்ளிட்ட அரசு ஆவணங்களுடன் பட்டா நிலத்தில் குடியிருந்து வருகின்றனர். இவர்கள் காலங்காலமாக பயன்படுத்தி வந்த பாதையில் தற்போது “அம்மன் நகர்” என்ற பெயரில் வீட்டுமனைப் பிரிவுகள் அமைக்கப்பட்டு சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இதனால் சேலம்–மேட்டூர் பிரதான சாலையை சுமார் அரை கிலோமீட்டர் தூரத்தில் சென்றடைந்து வந்த மக்கள், தற்போது சுமார் 2 கிலோமீட்டர் சுற்றி ஒத்தையடிப் பாதை வழியாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், அந்த ஒத்தையடிப் பாதையும் எதிர்காலத்தில் நில உரிமையாளர்களால் தடுக்கப்பட்டால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்படும்.அம்மன் நகர் பிளாட்டை சுற்றிஅமைக்கப்பட்டுள்ளசுற்றுச்சுவரில் உள்ளவாயிற்கதவு வழியாக ஒரு சிலர் மட்டும்அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவழியாக மற்ற சமூகத்தினரை அனுமதிக்கும் நிலையில், பட்டியலின மக்களுக்கு மட்டும் அனுமதி மறுக்கப்படுகிறது. வீட்டுமனைப் பிரிவு செய்யப்பட்டுபாதை பஞ்சாயத்து வசம் ஒப்படைக்கப்பட்டிருந்தால், குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும் அந்தப் பாதையைபயன்படுத்தக்கூடாது என தடுப்பது தீண்டாமையின் வடிவமாகும். எனவே, ராமன் நகர் மக்களுக்கு நிரந்தரமான பாதை வசதி ஏற்படுத்தித் தருவதுடன், அம்மன் நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புக் கேட்டுகளை அகற்றி அனைத்து சமூக மக்களும் சுதந்திரமாக சென்று வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.

இதில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் ஆர்.குழந்தைவேல், சிபிஎம்மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.கனகராஜ், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கமாவட்டச் செயலாளர் எஸ்.கே.சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.