தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

உளுந்தூர்பேட்டையில் சேதமடைந்த ஏரி மதகைச் சீரமைக்கக் கோரி சிபிஎம் மனு

16 Jul 2026, 11:58 pm
உளுந்தூர்பேட்டையில் சேதமடைந்த  ஏரி மதகைச் சீரமைக்கக் கோரி சிபிஎம் மனு
<p><strong>உளுந்தூர்பேட்டையில் சேதமடைந்த ஏரி மதகைச் சீரமைக்கக் கோரி சிபிஎம் மனு</strong></p><p>உளுந்தூர்பேட்டை,ஜூலை 16- உளுந்தூர்பேட்டை ஒன்றியம், எ.சாத்தனூர் ஊராட்சிக்குட்பட்ட எடைக்கல் கிராமத்தில் உள்ள பெரிய ஏரியின் மதகு கடந்த மூன்று ஆண்டு களாகச் சேதமடைந்து கிடப்பதால், பாசன வசதி பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்துள்ளனர். இந்த மனு அளிக்கும் நிகழ்விற்கு, சிபிஎம் உளுந்தூர்பேட்டை ஒன்றி யச் செயலாளர் வேலா பாலகிருஷ்ணன் தலைமை யில் அளிக்கப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டு ள்ளதாவது: “எடைக்கல் கிராமத்திற்குச் சொந்தமான இந்த ஏரியின் மூலம் சுமார் 150 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. விவ சாயத்தையே வாழ்வாதார மாகக் கொண்ட கிராம மக்கள், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பெய்த கனமழையால் ஏரியின் மதகு சேதமடைந்த பிறகு பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். மதகு சேதமடைந்ததால் தண்ணீர் சேமிக்க முடியா மல், விவசாயம் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைகளுக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டு ள்ளது. எனவே, நிகழாண்டு பருவமழை தொடங்குவ தற்கு முன்னரே, சேதம டைந்த மதகை உடனடி யாகப் புதுப்பித்து, விவ சாயிகளின் வாழ்வா தாரத்தைக் காக்க நட வடிக்கை எடுக்க வேண்டும்.” இந்த நிகழ்வில் கிளைச் செயலாளர் எம். விஜயகுமார், ஆர். மணி கண்டன், எ.பரசுராமன், கே. மணிகண்டன், பி. கொளஞ்சிமணி, பி. வேல்முருகன், ஆர். ராஜேஷ், வி. ஐயப்பன், எஸ். செல்வபாரதி உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.