முந்தய பக்கம்

காவிரி கூட்டு குடிநீர் வழங்கக் கோரி ஆணையாளரிடம் சிபிஎம் மனு

13 Jun 2026, 10:13 pm
காவிரி கூட்டு குடிநீர் வழங்கக் கோரி ஆணையாளரிடம் சிபிஎம் மனு
<p><strong>காவிரி கூட்டு குடிநீர் வழங்கக் கோரி ஆணையாளரிடம் சிபிஎம் மனு</strong></p><p>இராமநாதபுரம், ஜூன் 13- இராமநாதபுரம் அருகே உள்ள வெள்ளா கிராமத்திற்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் தொடர்ந்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய ஆணை யாளரிடம் மனு அளிக்கப்பட்டது. வெள்ளா கிராமத்தில் காவிரி கூட்டு குடி நீர் திட்டத்தின் கீழ் முறையாக குடிநீர் விநி யோகம் நடைபெறவில்லை எனக் கூறப்படு கிறது. இதனால் பொதுமக்கள் குடிநீர் தட் டுப்பாட்டால் அவதியடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இராமநாத புரம் தாலுகா குழு சார்பில் பொதுமக்களிட மிருந்து கையெழுத்துக்கள் பெறப்பட்ட மனு, திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய ஆணையாளரிடம் வழங்கப்பட்டது. மனுவை பெற்றுக்கொண்ட ஆணையா ளர், குடிநீர் பிரச்சனைக்கு 10 நாட்களுக்குள் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததாக தெரிவிக்கப்பட்டுள் ளது. இந்த நிகழ்வில் சிபிஎம் இராமநாதபுரம் தாலுகாச் செயலாளர் என்.வெங்கடேஷ், மாவட்டக்குழு உறுப்பினர் பி.செல்வராஜ், கிளைச் செயலாளர் ந.கருப்பசாமி, மூத்த நிர்வாகி ஜி.முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram