மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளைத் தீர்க்க எம்.எல்.ஏ-விடம் சிபிஎம் மனு
18 Jul 2026, 12:03 am
<p><strong>மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளைத் தீர்க்க எம்.எல்.ஏ-விடம் சிபிஎம் மனு</strong></p><p>திருவண்ணாமலை, ஜூலை 17- போளூர் பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போளூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.அபிஷேக்கிடம் 10 அம்சக் கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ப.செல்வன் தலைமையில், அக்கட்சியின் நிர்வாகிகள் சட்டமன்ற உறுப்பினரை நேரில் சந்தித்து இந்த மனுவை வழங்கினர். போளூர் பகுதியில் கலை அறிவியல் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி அமைக்க வேண்டும். போளூர் நக ராட்சிக்கு ஆணையரை நியமித்து, புதிய அலுவலகம் கட்ட வேண்டும். பயன்பாடின்றி உள்ள எரித்தகன மேடையைச் செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும். போளூர் பேருந்து நிலையத்தைச் சீரமைத்து, ரயில்வே மேம்பாலம் அருகே நடைமேம்பாலம் அமைக்க வேண்டும். மூடப்பட்டுள்ள தரணி சர்க்கரை ஆலையை அரசே ஏற்று நடத்த வேண்டும் மற்றும் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடி யாக பெற்றுத் தர வேண்டும். இந்த நிகழ்வில் மாவட்டக் குழு உறுப்பினர் இரா.சிவாஜி, போளூர் தாலுகா செயலாளர் இரா.ரவிதாசன், நகர செயலாளர் ப.கிருஷ்ணமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் பாலமுருகன், வீரமுத்து, ரவிராஜ், வே.வெங்கடேசன், திரு நாவுக்கரசு உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இந்த கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.</p>
