பட்டா கேட்டு ஆட்சியர் அலுவலகத்தில் சிபிஎம் மனு
24 Jun 2026, 1:54 am

பட்டா கேட்டு ஆட்சியர் அலுவலகத்தில் சிபிஎம் மனு

நாமக்கல், ஜூன் 23- இலவச வீட்டுமனை பட்டா கேட்டு விண் ணப்பித்த மனுக்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பட்டியல் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த 291 குடும்பங்களுக்கு வீட்டு மனை பட்டா கேட்டு, கடந்த நான்கு ஆண்டுக ளுக்கு முன்பு அதிகாரிகளிடம் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் மற்றும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு அளிக் கப்பட்டது. அதன்பின் குமாரபாளையம் வட் டாட்சியரின் தலையீட்டின் காரணமாக, தட் டான் குட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று அதிகாரிகள் விசாரணை செய்து, ஒரு சில ருக்கு மட்டும் பட்டா வழங்கினர். மற்ற கிராமங்களில் பயனாளிகளுக்கு தேவை யான பட்டா முழுமையாக வழங்கப்பட வில்லை. எனவே, மாவட்ட ஆட்சியர் உடனடி யாக பட்டா கிடைக்க உரிய நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாயன்று மார்க்சிஸ்ட் கட்சியினர் மனு அளித்தனர். இந் நிகழ்வில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப் பினர் சந்திரமதி, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் சி.துரைசாமி உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.