முந்தய பக்கம்

குடிமனைப் பட்டா வழங்கக் கோரி சிபிஎம் மனு

6 Jul 2026, 9:35 pm
குடிமனைப் பட்டா வழங்கக் கோரி சிபிஎம் மனு
<p><strong>குடிமனைப் பட்டா வழங்கக் கோரி சிபிஎம் மனு</strong> </p><p>இராமநாதபுரம், ஜூலை 6- இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டத்துக்கு உட்பட்ட வாலிநோக்கம் அருகே உள்ள சாத்தார்கோவில் கிராமத்தில், அரசுப் புறம்போக்கு நிலத்தில் 50 ஆண்டு களுக்கும் மேலாக குடியிருந்து வரும் மீனவர்களுக்கு இலவச குடிமனைப் பட்டா வழங்க வேண்டும் என வலி யுறுத்தி, சிபிஎம் சார்பில் மாவட்ட ஆட்சியர் மா.சிவகுரு பிரபாகரனிடம் மனு அளிக்கப்பட்டது. கடலாடி மேற்கு தாலுகாச் செயலாளர் எஸ்.ராமசாமி தலைமையில் அளிக்கப்பட்ட அந்த மனுவில், சாத்தார் கோயில் கிராமத்தில் சர்வே எண் 128/2-ல் உள்ள அரசுப் புறம்போக்கு நிலத்தில் பல ஆண்டுகளாக வசித்து வரும் மீனவ குடும்பங்களுக்கு இலவச குடிமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக் கப்பட்டுள்ளது. மனு அளிக்கும் நிகழ்வில் கே. பச்சம்மாள், யூ.சுமதி, கே.தேவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram